»   »  கமலுக்கு சந்திரஹாஸன் அண்ணன் அல்ல அப்பா: நடிகர் சங்கம் இரங்கல்

கமலுக்கு சந்திரஹாஸன் அண்ணன் அல்ல அப்பா: நடிகர் சங்கம் இரங்கல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கமல் ஹாஸனின் அண்ணன் சந்திரஹாஸன் மறைவுக்கு நடிகர் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.

கமல் ஹாஸனின் சகோதரர் சந்திரஹாஸன் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவர் மரணம் அடைந்த செய்தி அறிந்த நடிகர் சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.

இரங்கல் தெரிவித்து நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

சந்திரஹாஸன்

சந்திரஹாஸன்

நடிகர் பத்மஸ்ரீ கமல்ஹாஸன் அவர்களது இரண்டாவது சகோதரர் திரு. சந்திராஹஸன் அவர்கள் லண்டனில் உள்ள அவரது மகள் அனுஹாஸனின் இல்லத்தில் நேற்று இரவு காலமானார் என்பதை அறிந்து வேதனையடைந்தோம்.

கமல்

கமல்

பால்யகாலம் முதல் திரு. கமல் ஹாஸன் அவர்களுக்கு வழிகாட்டியாக, உறுதுணையாக, அவரது வளர்ச்சிக்கு காரணமாக இருந்து வந்தவர் திரு. சந்திரஹாஸன்.

அப்பா

அப்பா

எனவே தான் அவரை தனது மூத்த சகோதரர் என்றியிலில்லாமல் அப்பா என்றே எப்போதும் குறிப்பிடுவார். அப்பேர்ப்பட்ட அவரது ஆன்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்கிறோம்.

அனுதாபம்

அனுதாபம்

அவரது இழப்பால் துக்கத்தில் வாடும் திரு கமல் ஹாஸன், மூத்த சகோதரர் நடிகர் திரு. சாருஹாஸன் மற்றும் அவர்களது குடும்பத்தார் அனைவருக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் தங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறது.

English summary
Nadigar Sangam has condoled the death of Kamal Haasan's elder brother Chandra Haasan's death.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil