»   »  நடிகர் குமரிமுத்து மறைவுக்கு நடிகர் சங்கம் இரங்கல்!

நடிகர் குமரிமுத்து மறைவுக்கு நடிகர் சங்கம் இரங்கல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை- நடிகர் குமரிமுத்து மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் அஞ்சலி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நடிகர் சங்கம் விடுத்துள்ள இரங்கல் அறிக்கை:

Nadigar Sangam condoles for Kumari Muthu death

தன்னுடைய நடி​​ப்பாலும், மறக்கமுடியா தனிப்பட்ட சிரிப்பாலும் நம்மோடு பயணித்த அண்ணன் குமரிமுத்து அவர்கள் ​​இன்று நம்மை விட்டுப் ​பிரிந்தார். ​அதற்காக மனம் வருந்துகிறோம்.​ அவரை இழந்து வாடும் ​அவருடைய ​உற்றார்க்கும்,​ சு​​ற்றத்தார்க்கும் எங்கள் ஆறுதலைச் சமர்ப்பி​​க்​கிறோம்.

Nadigar Sangam condoles for Kumari Muthu death

இந்​த ​நேரத்தில் அவர் சங்கத்தி​​ற்​​​கு ஆற்றிய அரு​​​​ம்பணிகளையும் சங்க நலத்திற்காக குரல் கொடுத்து போராடியதையும் நியமன செயற்குழு உறு​​ப்​பினராக எங்களோடு செயல்பட்டு முன்னேற்றத்திற்கான பல்வேறு யோசனைகளை ​சமீபகாலம் வரையிலும் ​வழங்கியதை நன்றியுடன் நினைவு கூர்கிறோம்.

Nadigar Sangam condoles for Kumari Muthu death

நிறைவுசெய்யமுடியா ஒருவெற்றிடத்தை விட்டு சென்றிருக்கும் அவர் சங்கத்திற்காக கண்ட கனவுகளை நனவாக்குவது ஒன்றே அவர் ஆத்துமாவுக்கு செலுத்துகின்ற மலர் வளையமாகும்.

English summary
The South Indian Nadigar Sangam has condoled for the demise of actor Kumari Muthu.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil