»   »  நட்சத்திர கிரிக்கெட்: ரஜினியும் கமலும் ஆடப் போறாங்களா... சும்மா பார்க்கப் போறாங்களா?

நட்சத்திர கிரிக்கெட்: ரஜினியும் கமலும் ஆடப் போறாங்களா... சும்மா பார்க்கப் போறாங்களா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

நட்சத்திரக் கிரிக்கெட் போட்டியில் (இப்போது நடக்கும் சிசிஎல் அல்ல) ஏதாவது ஒரு வகையில் பங்கேற்க வாருங்கள் என நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாஸனுக்கு அழைப்பு விடுத்துள்ளது நடிகர் சங்கம்.

நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டடம் கட்டும் முயற்சி தீவிரமடைந்துள்ளது. இந்த கட்டிடம் கட்டுவதற்கு பலகோடி ரூபாய் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய படம்

புதிய படம்

இதற்காக புதிய படம் ஒன்றில் விஷால், கார்த்தி, ஆர்யா, ஜெயம் ரவி, ஜீவா உள்ளிட்ட நடிகர்கள் சம்பளம் வாங்காமல் நடிக்க முடிவு செய்துள்ளனர். இதற்கான கதை மற்றும் இயக்குநர் தேர்வு நடக்கிறது. இந்த படம் மூலம் வசூலாகும் தொகை முழுவதும் கட்டட நிதியில் சேர்க்கப்படுகிறது.

இரு நட்சத்திர அணிகள்

இரு நட்சத்திர அணிகள்

அத்துடன் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தி நிதி திரட்டவும் ஏற்பாடுகள் நடக்கிறது. அனைத்து முன்னணி நடிகர்களையும் இரண்டு அணிகளாக உருவாக்கி இந்த போட்டியை நடத்த உள்ளனர். கிரிக்கெட் விளையாடும் நடிகர்கள் பட்டியல் தற்போது தயாராகி வருகிறது. சென்னையில் இந்த நட்சத்திர கிரிக்கெட் நடைபெறும் என்று தெரிகிறது.

நாயகிகளுக்கு ஆட சான்ஸ் இல்ல

நாயகிகளுக்கு ஆட சான்ஸ் இல்ல

முன்னணி கதாநாயகிகள் நட்சத்திர கிரிக்கெட்டில் பார்வையாளர்களாக கலந்துகொள்கிறார்கள். பார்வையாளர்களை உற்சாகப்படுத்தும் பொறுப்பும் இவர்களுக்கு தரப்படுகிறது.

ரஜினி - கமல்

ரஜினி - கமல்

சாதனை நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவரையும் இந்த நட்சத்திர கிரிக்கெட்டில் கலந்து கொள்ள அழைக்கப் போகிறார்களாம். இவர்கள் கிரிக்கெட் விளையாடுவார்களா? அல்லது பார்வையாளர்களாக மட்டும் கலந்து கொள்வார்களா? என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

தேர்தலுக்கு முன்பே

தேர்தலுக்கு முன்பே

தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு முன்பே இந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டியை நடத்திவிடலாம் என சிலர் யோசனை தெரிவித்துள்ளனர்.

ஆனால், தேர்தல் முடிந்து புதிய அரசு அமைந்த பிறகு நடத்தினால் நன்றாக இருக்கும் என்பது பலரது யோசனையாகும்.

இதுகுறித்த இறுதி முடிவு வரும் மார்ச் மாதம் நடக்கவிருக்கும் நடிகர் சங்க பொதுக்குழுவில் எடுக்கப்படும்.

English summary
The Nadigar Sangam has decided to conduct a star cricket match with Rajini, Kamal to raise funds to construct Nadigar Sangam building.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil