»   »  நடிகர் சங்கக் கடனை அடைச்சாச்சு... விஷால் பெருமிதம்

நடிகர் சங்கக் கடனை அடைச்சாச்சு... விஷால் பெருமிதம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சங்கத்தின் கடனை முழுமையாக அடைத்து விட்டதாக நடிகர் விஷால் தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக சரத்குமார் தலைமையிலான பழைய நிர்வாகிகள் நடிகர் சங்க நிலத்தை எஸ்பிஐ சினிமாஸிடம் ஒப்படைத்து, அதன்மூலம் நடிகர் சங்கத்தின் கடனை அடைக்க ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்நிலையில் கடந்த வருடம் நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளாக நாசர் தலைமையிலான அணி பொறுப்பேற்றது. அவர்கள் நடிகர் சங்க நிலத்தை கடன் வாங்கி எஸ்பிஐ சினிமாஸிடம் இருந்து மீட்டனர்.

Nadigar Sangam Debts Cleared says Vishal

கடன் தொகையை அடைக்கவும், நடிகர் சங்கக் கட்டிடத்தை கட்டுவதற்காகவும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி ஒன்றை கடந்த 17 ம் தேதி நடிகர் சங்கம் நடத்தியது.

தற்போது நட்சத்திரக் கிரிக்கெட் போட்டி மூலம் கிடைத்த வருவாயை வைத்து நடிகர் சங்கத்தின் கடனை முழுமையாக அடைத்து விட்டதாக, பொதுச்செயலாளர் விஷால் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் " நடிகர் சங்கத்தின் 2 கோடி ரூபாய் கடனை அடைத்து விட்டோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். நடிகர் சங்க வரலாற்றிலேயே முதன்முறையாக நடிகர் சங்க நிலம் கைக்கு வந்துவிட்டது.

மேலும் 8 கோடி ரூபாய் நடிகர் சங்க அறக்கட்டளை கணக்கில் உள்ளது. இதற்காக அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.

English summary
Actor Vishal Says "Nadigar sangam s clean of debts in our land is Back with almost 8 crore in the trust account.1st time in history of nadigar sangam.thanks all for this".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil