»   »  'அவங்களுக்கு இருக்கும் அக்கறையில ஒரு பர்சன்ட் கூட அஜீத், விஜய்க்கு இல்லையே!'- நடிகர் சங்கம்

'அவங்களுக்கு இருக்கும் அக்கறையில ஒரு பர்சன்ட் கூட அஜீத், விஜய்க்கு இல்லையே!'- நடிகர் சங்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நட்சத்திர கிரிக்கெட் நடந்து முடிந்துவிட்டது. ஆனால் அந்த நட்சத்திர கிரிக்கெட்டால் உருவாகியுள்ள கசப்புணர்வு இனி வேறு வேறு வடிவங்களில் வெளிப்படக் கூடும். இந்த கசப்புணர்வுக்குக் காரணமானவர்கள் விஜய்யும் அஜீத்தும்.

திரையுலகில் ஜாம்பவான்கள் என்று கருதப்படும் ரஜினியும் கமலும் கூட அரை நாள் வரை இருந்து பார்த்து உற்சாகப்படுத்திய (கமல் மாலையிலும் வந்தார்) நட்சத்திரக் கிரிக்கெட் நிகழ்ச்சிக்கு, ஊரிலிருந்தும்கூட வராமல் தவிர்த்த விஜய், அஜீத் மீது ஏக வருத்தம் திரையுலகினருக்கு.

Nadigar Sangam disappoints with Ajith & Vijay

பக்கத்து மாநிலங்களிலிருந்து பெரிய நடிகர்கள் அத்தனைப் பேரும் இந்த நிகழ்ச்சிக்கு வந்தார்கள். தெலுங்கு தேசத்திலிருந்து நாகார்ஜூனா, வெங்கடேஷ், பாலகிருஷ்ணா என மும்மூர்த்திகளாக வந்து கலந்து கொண்டனர். அதிலும் பாலகிருஷ்ணா ஒரு நாள் முழுக்க இருந்து உற்சாகப்படுத்தி தன் ஆதரவை வழங்கினார். 'நான் நடிகர் சங்கத்தின் ஆயுள்கால உறுப்பினர். நான் கலந்து கொள்ளாமல் இருப்பேனா?' என்று உரிமையோடு பேசி நெகிழ வைத்தார்.

கேரளாவிலிருந்து மம்முட்டி வந்து கலந்து கொண்டார். கன்னடத்தின் முன்னணி ஹீரோ புனித் ராஜ்குமார், 'இது நான் பிறந்த மண். இந்த நிகழ்ச்சிக்கு வராமல் போனால்தான் தவறு' என்று உணர்ச்சிவசப்பட்டார்.

இப்படி பக்கத்து மாநிலத்தின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் பங்கேற்ற நிகழ்ச்சியில், தமிழின் முன்னணி நடிகர்களான விஜய்யும் அஜீத்தும் வராமல் போனது, அதுவும் வீட்டிலிருந்து கொண்டே வராமல் தவிர்த்தது திரையுலகினருக்கு பெரும் வருத்தத்தைத் தந்தது.

'இந்த இருவரும் ஈகோ பார்க்கிறார்கள் என்பது மட்டும் தெள்ளத் தெளிவாகிவிட்டது. இப்போது நடிகர் சங்க நிர்வாகத்தில் இருப்பவர்கள் இளைஞர்கள். மிக ஆர்வத்துடன் சங்கத்துக்காக உழைக்கிறார்கள். இதன் பலன் பல நலிந்த கலைஞர்களுக்குத்தான் கிடைக்கப் போகிறது. அவர்களும் மக்கள்தானே... ஆனால் அஜீத்தும் விஜய்யும் விஷாலுக்கு முக்கியத்துவம் கிடைத்துவிடும் என்று நினைத்து புறக்கணிக்கிறார்கள். தங்கள் ஈகோவைத் திருப்திப்படுத்த நடிகர் சங்கத்தை அவமதிக்கிறார்கள் இந்த இரு நடிகர்களும். விஜய்யை பல முறை அழைத்தோம். முயற்சி செய்கிறேன் என்று மட்டும் சொன்னார். ஆனால் அஜீத்தோ அழைப்பிதழையே வாங்கவில்லை தெரியுமா?' என்று கோபப்பட்டார் நடிகர் சங்க நிர்வாகி ஒருவர்.

இதென்னப்பா புது பூதமா இருக்கே!

English summary
Nadigar Sangam has totally upset over the absence of Vijay and Ajith for Natchathira Cricket.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil