»   »  நடிகர் சங்கத் தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல்... தலைவர் பதவிக்கு மும்முனைப் போட்டி

நடிகர் சங்கத் தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல்... தலைவர் பதவிக்கு மும்முனைப் போட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பரபரப்பான நடிகர் சங்கத் தேர்தல் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது, இந்நிலையில் இன்று காலை இறுதி வேட்பாளர்கள் பட்டியலை தேர்தல் அதிகாரி பத்மநாபன் வெளியிட்டிருக்கிறார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வருகிற 18-ந் தேதி தேர்தல் நடக்கிறது.நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் தலைமையில் ஒரு அணியும், விஷால் தலைமையில் ஒரு அணியும் போட்டியிடுகின்றனர்.

Nadigar Sangam Election 2015: Final Candidates List Released

இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 1-ந் தேதி தொடங்கி 3-ந் தேதி முடிவடைந்தது. இந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 5-ந் தேதி நடைபெற்றது.

இதில் மொத்தம் 71 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ததாகவும், அவற்றில் 68 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டதாகவும் தேர்தல் அதிகாரி ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று நடிகர் சங்க தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், தலைவர் பதவிக்கு சரத்குமார், நாசர், சிவசாமி ஆகிய 3 பேர் போட்டியிடுகின்றனர்.

துணை தலைவர் பதவிக்கு கருணாஸ், மோகன்குமார், பொன்வண்ணன், சிம்பு, விஜயகுமார் ஆகியோரும், பொதுச்செயலாளர் பதவிக்கு ராதாரவி, விஷால், சிவசாமி ஆகியோரும், பொருளார் பதவிக்கு கண்ணன், கார்த்தி ஆகியோரும் போட்டியிடுவதாக தேர்தல் அதிகாரி தெரிவித்திருக்கிறார்.

செயற்குழு உறுப்பினர் பதவிக்கு 48 பேர் போட்டியிட இருக்கின்றனராம். மொத்தம் 61 பேர் நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

நடிகர் சங்கத் தேர்தல் வருகின்ற 18 ம் தேதி சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள செயின்ட் எப்பாஸ் மெட்ரிக்குலேசன் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெறும்.

English summary
Nadigar Sangam Election 2015: 61 Eligible Final Candidates List Released Today.The election has been scheduled for 18th of this month from morning 7am till evening 5pm at St.Ebbas Matriculation School at Mylapore while Retired Judge Padmanabhan has been appointed for the election chairman.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil