»   »  நடிகர் சங்கத் தேர்தல்: 8ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல்

நடிகர் சங்கத் தேர்தல்: 8ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சங்கத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் நேற்று மாலையுடன் நிறைவுற்றது. தொடர்ந்து இன்று மாலை 4 மணியளவில் வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறும். 8ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும்.

நடிகர் சங்க தேர்தல் வருகிற 18ம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் சரத்குமார் தலைமையில் ஒரு அணியும், விஷால் தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிடுகின்றன.

தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த அக்டோபர் 1ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து 3 நாட்களாக நடைபெற்று வந்த வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவுக்கு வந்தது.

சரத்குமார்

சரத்குமார்

நடிகர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிடும் நடிகர் சரத்குமார் அக்டோபர் 1 ம் தேதி தேர்தல் அதிகாரியான நீதிபதி பத்மநாபனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் அவரது அணியினரும் சென்றிருந்தனர். துணைத்தலைவர் பதவிக்கு நடிகர் விஜயகுமார் மனுத்தாக்கல் செய்தார்.தி.நகர் அபிபுல்லா சாலையில் பழைய நடிகர் சங்க கட்டிடம் அருகே உள்ள அலுவலகத்தில் மனுக்கள் பெறப்பட்டன.

2 ம் தேதி

2 ம் தேதி

சரத்குமார் அணியைச் சேர்ந்தவர்கள் 2 ம் தேதியன்றும் மனுத்தாக்கல் செய்தனர். மற்றொரு துணைத் தலைவர் பதவிக்கு சிம்பு, பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் ராதா ரவி, பொருளாளர் பதவிக்கு நிற்கும் எஸ்.எஸ்.ஆர் கண்ணன் ஆகியோர் மனுதாக்கல் செய்தனர்.தொடர்ந்து அன்றைய தினமே செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு நளினி, கே.ராஜன், டி.பி.கஜேந்திரன், எஸ்.என்.பார்வதி, ஆர்.ரவிக்குமார், ராம்கி, மோகன் ராம், ஜாக்குவார்தங்கம், பசிசத்யா, கே.ஆர்.செல்வராஜ், பவன், எம். ராஜேந்திரன், வி.சி.ஜெயமணி, எஸ்.எம்.இசையரசன், எஸ்.பி. கலைமணி, திருச்சி எம்.எஸ். முகமது மஸ்தான், நாமக்கல் ராஜா, சிசர் மனோகர் ஆகிய 18 பேர் மனுதாக்கல் செய்தனர்.

3 வது நாளில்

3 வது நாளில்

கடைசி நாளான நேற்று நிரோஷா, கே.என்.காளை, வீரமணி, குமரேசன், சாந்தகுமார், ஐஸ்அசோக் ஆகிய 6 பேர் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு மனுதாக்கல் செய்தனர். இவர்களையும் சேர்த்து சரத்குமார் அணி சார்பில் மொத்தம் 24 பேர் பொதுக்குழு உறுப்பினர் பதவிக்கு மனு தாக்கல் செய்துள்ளனர்.

நாசர் வேட்பு மனு

நாசர் வேட்பு மனு

விஷால் அணியினர் கடந்த 2 ம் தேதி காலை தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.தலைவர் பதவிக்கு நாசர் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். துணைத்தலைவர்கள் பதவிக்கு கருணாஸ், பொன்வண்ணன், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். இதுதவிர அன்றைய தினத்தில்செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு 24 பேர் மனு தாக்கல் செய்தனர்.

மற்ற பதவிகளுக்கு

மற்ற பதவிகளுக்கு

2 ம் தேதி விஷால் மற்றும் நாசர் உள்ளிட்டவர்கள் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் எஞ்சியவர்கள் நேற்று தங்கள் மனுக்களை நீதிபதி பத்மநாபனிடம் தாக்கல் செய்தனர். நேற்றுடன் மனுத்தாக்கல் முடிவடைந்தது.

இன்று வேட்பாளர் பட்டியல்

இன்று வேட்பாளர் பட்டியல்

தேர்தலில் போட்டியிட தாக்கலான வேட்புமனுக்கள் இன்று பரிசீலிக்கப்படும். தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் 8-ந் தேதி வெளியிடப்படும். சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள செயின்ட் எப்பாஸ் மெட்ரிக்குலேசன் மேல் நிலைப்பள்ளியில் தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெறும். தேர்தல் அதிகாரியாக ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் நியமிக்கப்பட்டுள்ளார்.

வேட்புமனுத் தாக்கல் முடிவடைந்ததைத் தொடர்ந்து 2 தரப்பினரும் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Nadigar Sangam Election 2015: Yesterday Evening Nominations ended, The Eligible Candidate List May be Released on Today Evening.The election has been scheduled for 18th of this month from morning 7am till evening 5pm at St.Ebbas Matriculation School at Mylapore while Retired Judge Padmanabhan has been appointed for the election chairman.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more