»   »  நடிகர் சங்கத் தேர்தல்: 934 பேர் தபாலில் வாக்களித்தனர்

நடிகர் சங்கத் தேர்தல்: 934 பேர் தபாலில் வாக்களித்தனர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான தேர்தலின் முதல் கட்டமாக 934 பேர் தபாலில் வாக்களித்துள்ளனர்.

நடிகர் சங்கத்துக்கு வரும் 18-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் சரத்குமார் அணியும், விஷால் அணியும் மோதுகின்றன.

Nadigar Sangam Election: 934 postal votes sent

இரு அணி சார்பிலும் தலைவர், பொதுச்செயலாளர், 2 துணைத்தலைவர்கள், ஒரு பொருளாளர் மற்றும் 24 செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கு மொத்தம் 58 பேர் போட்டியிடுகின்றனர்.

ஒரு சுயேட்சை வேட்பாளர் தலைவர் பதவிக்கும் பொதுச்செயலாளர் பதவிக்கும் போட்டியிடுகிறார். இன்னொரு சுயேட்சை வேட்பாளர் துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

நடிகர் சங்கத்தில் ஓட்டுப்போட தகுதியுள்ள மொத்த வாக்காளர்கள் 3,139 பேர். இதில் நடிகர் நடிகைகள், மற்றும் நாடக-நடிகர் நடிகைகள் அடங்குவர். வெளியூர்களில் இருந்து 1,175 வாக்காளர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் தபாலில் ஓட்டுக்களை அனுப்பி வைப்பது வழக்கம். ஆனால் இந்த தேர்தலில் 241 பேர் நேரில் வாக்களிப்பதாக தேர்தல் அதிகாரிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

இவர்களைத் தவிர்த்து மீதியுள்ள 934 பேருக்கு தபாலில் வாக்களிக்க கடந்த 9-ந்தேதி வாக்குச் சீட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டன. 12-ந்தேதி முதல் தபால் ஓட்டுகள் சென்னையில் உள்ள தேர்தல் அதிகாரி அலுவலகத்துக்கு வர ஆரம்பித்தன. தபால் ஓட்டுகள் வந்து சேர்வதற்கு நாளை மறுநாள்(17-ந்தேதி) கடைசி தேதி.

நேரில் ஓட்டுப்போடுபவர்களுக்கான வாக்குப்பதிவு 18-ந்தேதி சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள எப்பாஸ் பள்ளியில் நடக்கிறது. காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி மாலை 5 மணிக்கு முடிவடைகிறது. அன்று இரவே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.

எப்போதும் இல்லாத பரபரப்பு மற்றும் முக்கியத்துவத்துடன் நடக்கும் இந்தத் தேர்தலில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பெரிய நடிகர், நடிகைகள் நேரில் வந்து வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
934 postal votes for Nadigar Sangam election have sent to the election officer from various parts of the state.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil