»   »  நடிகர் சங்கத் தேர்தல்: மாற்றம் இருக்கும்... ஏமாற்றம் இருக்காது - பாபிலோனா

நடிகர் சங்கத் தேர்தல்: மாற்றம் இருக்கும்... ஏமாற்றம் இருக்காது - பாபிலோனா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சங்கத் தேர்தலில் மாற்றம் கண்டிப்பாக இருக்கும் ஆனால் ஏமாற்றம் இருக்காது என்று நடிகை பாபிலோனா கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

நடிகர் சங்கத் தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை சுமார் 70% வாக்குகள் பதிவாகி இருப்பதாக கடைசியாக வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பாக நடிகை ரேகா, சுகன்யா மற்றும் பாபிலோனா ஆகியோர் தங்கள் கருத்துகளை தெரிவித்து இருக்கின்றனர்.

பாபிலோனா

பாபிலோனா

நடிகர் சங்கத் தேர்தலில் இந்த மாற்றத்தை நான் வரவேற்கிறேன். இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதிதாக வந்திருக்கும் பாண்டவர் அணிக்கு நான் எனது ஆதரவை தெரிவித்திருக்கிறேன். பாண்டவர் அணியின் 29 உறுப்பினர்களுக்கும் நான் பார்த்துப் பார்த்து வாக்களித்து இருக்கிறேன்.

மாற்றம் இருக்கும்

மாற்றம் இருக்கும்

இந்தக முறை தேர்தலில் மாற்றம் கண்டிப்பாக இருக்கும் ஆனால் ஏமாற்றம் கண்டிப்பாக இருக்காது. ஒருவேளை பாண்டவர் அணி தோல்வியுற்றாலும் அவர்கள் இவ்வளவு தூரம் வந்ததே ஒரு பெரிய வெற்றிதான். மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது குறித்து நான் கவலை கொள்ளவில்லை, என்று நடிகை பபிலோனா கருத்து தெரிவித்திருக்கிறார்.

சுகன்யா

சுகன்யா

நடிகை சுகன்யா கூறும்போது "நடிகர் சங்கத்தில் ஒவ்வொருவரின் ஓட்டும் முக்கியமானது, அனைவரும் வந்து வாக்களிக்க வேண்டும். சங்கத்தில் ஒற்றுமை இல்லாமல் இருபது வருத்தமளிக்கிறது,நடிகர் சங்கத் தேர்தல் முடிவுகள் வந்தவுடன் அனைவரும் ஒரு சங்கமமாக மாற வேண்டும் என்பதே எனது ஆசை"என்று நடிகை சுகன்யா கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

ரேகா

ரேகா

நடிகை ரேகா இவ்வளவு பரபரப்பாக தேர்தல் நடந்து நான் பார்த்தது இல்லை, நடிகர் சங்கத் தேர்தல் முடிந்தவுடன் அனைவரும் ஒற்றுமையாக மாறுவார்கள். கண்டிப்பாக சங்கக் கட்டிடம் கட்டப்படும் என்று நடிகை ரேகா கூறியிருக்கிறார்.

இவ்வாறு நடிகைகள் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

English summary
Tamilnadu Nadigar Sangam Election: Actress babilona says "Election Results will be Change not be Disappointed".
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil