twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கள்ள ஓட்டு, அத்துமீறல், அழுகை, கோபம்: ஒரு வழியாக முடிந்த நடிகர் சங்க தேர்தல்

    By Siva
    |

    Recommended Video

    Nadigar Sangam Election:வாக்குகளை பதிவிட்ட முத்த நடிகைகள்

    சென்னை: நடிகர் சங்க தேர்தல் ஒரு வழியாக நல்லபடியாக நடந்து முடிந்துள்ளது.

    நடிகர் சங்க தேர்தல் பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு இன்று ஒரு வழியாக நல்லபடியாக நடந்து முடிந்துள்ளது. சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் நடந்த இந்த தேர்தலில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 1604 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர்.

    Nadigar Sangam election is done

    கமல் ஹாஸன், விஜய், சிவகார்த்திகேயன், சூர்யா, விக்ரம், ஆர்யா உள்ளிட்ட ஏராளமானோர் வாக்களித்தனர். அஜித் வாக்களிக்க வருவதாக கூறப்பட்டது. ஆனால் அவர் வரவில்லை. நடிகர் சந்தானம் வாக்களித்துவிட்டு தனது ஆதரவு பாண்டவர் அணிக்கே என்றார்.

    இன்றைய தேர்தலில் பெரிதாக எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. நடிகர் மைக் மோகன் பெயரில் யாரோ வாக்களித்துவிட்டனர். அதனால் அவர் அது குறித்து தேர்தல் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் ஒன்றும் நடக்காது என்று தெரிந்த பிறகு கோபமாக கிளம்பிவிட்டார்.

    பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியில் செயற்குழு உறுப்பினர்களை தவிர்த்து 9 பேர் வாக்குப்பதிவு மையத்திற்குள் சென்றதால் விஷாலின் பாண்டவர் அணியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்யா சைக்கிள் ஓட்டியபடியே வந்து வாக்களித்தார். தர்பார் படப்பிடிப்பில் மும்பையில் இருக்கும் ரஜினிகாந்துக்கு தபால் ஓட்டு தாமதமாக சென்றதால் அவரால் ஓட்டு போட முடியவில்லை.

    பிரச்சார வீடியோவில் பாண்டவர் அணியினர் தனது தந்தை சரத்குமாரை தாக்கிப் பேசியதை பார்த்த வரலட்சுமி கோபம் அடைந்து விஷாலை விளாசி ட்வீட் போட்டார். உங்களுக்கு என் ஓட்டு இல்லை என்றார். இந்நிலையில் அவரும் இன்று வாக்களித்துள்ளார். அந்த ஓட்டு கண்டிப்பாக விஷால் அணிக்கு கிடைத்திருக்காது என்று நம்பப்படுகிறது.

    எந்த அணி வெற்றி பெறுகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். வாக்குப்பதிவு முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த நாசர் கூறியதாவது,

    இன்றைய தேர்தலில் 85 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். 1, 604 நேரில் வாக்களித்துள்ளனர். 900 பேர் தபால் ஓட்டுகள் மூலம் வாக்களித்துள்ளனர். வாக்குப்பெட்டிகள் நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கியில் வைக்கப்படும். வரும் ஜூலை மாதம் 8ம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்றார்.

    English summary
    Nadigar Sangam election is held after so many issues. 1, 604 members cast their vote today.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X