»   »  நடிகர் சங்கத் தேர்தலில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை - விஷால்

நடிகர் சங்கத் தேர்தலில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை - விஷால்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சங்கத் தேர்தலில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று நடிகர் விஷால் தெரிவித்து இருக்கிறார். தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வருகின்ற 18 ம் தேதி நடைபெறவிருக்கிறது.

இதனையொட்டி சரத்குமார் தலைமையில் ஒரு அணியினரும், விஷால் தலைமையில் ஒரு அணியினரும் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கின்றனர்.

Nadigar Sangam Election: There is no Question of Compromised - says Vishal

இதனால் இதுவரை இல்லாத அளவிற்கு நடிகர் சங்கத் தேர்தல் பரபரப்பான ஒரு விஷயமாக மாறியிருக்கிறது. இன்னும் சில நாட்களே உள்ளதால் 2 தரப்பினரும் கடுமையாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

மூத்த நடிகர்கள் மற்றும் நடுநிலையாளர்கள் 2 தரப்பினருக்கும் இடையில் சமாதான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஷால் "நடிகர் சங்கத் தேர்தலில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

நாங்கள் தேர்தலை எதிர்கொள்ளத்தான் போகிறோம். இறுதிவரை நாங்கள் போராடுவோம் ஏனெனில் மாற்றத்தைக் கொண்டுவர நாங்கள் விரும்புகிறோம்" என்று கூறியிருக்கிறார்.

ஆக மொத்தம் நடிகர் சங்கத் தேர்தலில் சமாதானம் என்ற பேச்சுக்கே இடமில்லை போல...

English summary
Vishal Says "There is no Question of Compromise, we are going ahead with elections. We will Fight till the end and bring the change that is needed'.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil