»   »  தேர்தலை நிறுத்த எதிரணியினர் சதி... பயப்படாமல் அனைவரும் வாக்களிக்க வேண்டும்- வடிவேலு

தேர்தலை நிறுத்த எதிரணியினர் சதி... பயப்படாமல் அனைவரும் வாக்களிக்க வேண்டும்- வடிவேலு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சங்கத் தேர்தலை நடத்த எதிரணியினர் சதி செய்வதாக நடிகர் வடிவேலு பகிரங்கமாக சரத்குமார் அணியினர் மீது குற்றம் சுமத்தியிருக்கிறார்.

நடிகர் சங்கத் தேர்தல் இன்று பரபரப்பாக நடைபெற்று வருகிறது, காலை 7 மணி முதல் தொடர்ந்து தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அமைதியாக சென்று கொண்டிருந்த தேர்தலில் திடீரென்று தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனால் இரு அணியினரும் மோதிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டது இந்நிலையில் நடிகர் வடிவேலு பின்வருமாறு பேட்டி அளித்திருக்கிறார்.

நடிகர் சங்கத் தேர்தல்

நடிகர் சங்கத் தேர்தல்

நடிகர் சங்கத் தேர்தல் இன்று பரபரப்பாக நடைபெற்று வருகிறது, காலை 7 மணி முதல் தொடர்ந்து தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அமைதியாக சென்று கொண்டிருந்த தேர்தலில் திடீரென்று தள்ளுமுள்ளு ஏற்பட்டது.இதனால் இரு அணியினரும் மோதிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டது. இந்த மோதலில் நடிகை சங்கீதா, விஷால் ஆகியோர் தாக்கப்பட்டனர்.

தேர்தல் நிற்காது - விஷால்

தேர்தல் நிற்காது - விஷால்

மோதலில் மயக்கம் அடைந்த விஷால் சிறிது நேரம் கழித்து ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். என்ன நடந்தாலும் தேர்தல் மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெறும் யாராலும் இந்த தேர்தலை நிறுத்த முடியாது என்று கூறினார். 2 அணியினரும் இணைந்து தற்போது தேர்தல் அமைதியாக நடைபெற வழிவகை செய்து வருகின்றனர்.

வடிவேலு

வடிவேலு

இந்த மோதல் குறித்து நடிகர் வடிவேலு கூறும்போது "முழு முயற்சியுடன் எதிரணியினர் தேர்தலை நிறுத்த முயற்சி செய்கின்றனர்.பாண்டவர் அணியின் வெற்றியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது" என்று குறிப்பிட்டார்.

அனைவரும் வாக்களியுங்கள்

அனைவரும் வாக்களியுங்கள்

மேலும் "நடிகர்கள் அனைவரும் வந்து வாக்களிக்க வேண்டும், யாரும் பயப்பட வேண்டாம் என்றும் வடிவேலு நடிக, நடிகையற்கு கோரிக்கை வைத்திருக்கிறார். எதிரணியினர் ரவுடியிசத்தை விடுத்தது நடிகர்களாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருக்கிறார். வடிவேலுவின் இந்த பேச்சு திரையுலகில் சற்றே சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

English summary
Nadigar Sangam Election: Actor Vadivelu says "Everyone should be registered their vote , we are winning this election".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil