»   »  ராதாரவி என்ன பதவிக்கு நிக்கிறாரோ அந்தப் பதவிக்கு நிற்க முடிவு செய்தேன் - விஷால்

ராதாரவி என்ன பதவிக்கு நிக்கிறாரோ அந்தப் பதவிக்கு நிற்க முடிவு செய்தேன் - விஷால்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சங்கத் தேர்தலில் நடிகர் ராதாரவி என்ன பதவிக்கு நிற்கிறாரோ அந்தப் பதவிக்கு நிற்க முடிவு செய்தேன் என்று நடிகர் விஷால் கூறியிருக்கிறார்.

சமீபத்தில் விஷால் அணியின் ஆதரவாளர்கள் கூட்டம் சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் விஷால் அணியினர் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

இந்தக் கூட்டத்தில் நாங்கள் என்ன காரணத்திற்காக இந்தத் தேர்தலில் நிற்கிறோம் என்று விஷால் அணியினர் தங்கள் தரப்பு நியாயங்களை எடுத்துக் கூறியிருக்கின்றனர்.

விஷால்

விஷால்

நடிகர் சங்கத் தேர்தலில் பொதுச்செயலாளர் பதவிக்கு நடிகர் விஷால் போட்டியிடுகிறார். அவர் பேசும்போது நடிகர் சங்கத் தேர்தலில் ராதாரவி அண்ணன் என்ன பதவிக்கு நிற்கிறாரோ அந்தப் பதவிக்கு நிற்க நானும் முடிவு செய்தேன். அவர் பொதுச்செயலாளர் பதவிக்கு நிற்பதால் நானும் பொதுச்செயலாளர் பதவிக்கு நிற்கிறேன்.

பாண்டவர் அணி

பாண்டவர் அணி

நாங்களாக இந்தப் பெயரை வைத்துக் கொள்ளவில்லை முதன்முதலாக இந்தப் பெயரை வைத்தது கார்த்தியின் அப்பா சிவகுமார் அய்யா தான் என்று அணியின் பெயர் வைத்த விவரத்தை தெரிவித்தார்.

3 வருடங்களுக்கு முன்பாக

3 வருடங்களுக்கு முன்பாக

3 வருடங்களுக்கு முன்பாக ஆரம்பித்த ஒரு சிறிய கேள்விதான் இன்று நடிகர் சங்கத் தேர்தலில் வந்து நிற்கிறது. அக்டோபர் 18ம் தேதி ஒரு முக்கியமான நாள் நீங்கள் அனைவரும் வந்து வாக்குப்பதிவு செய்ய வேண்டும்.

நாய் நன்றி உள்ளது

நாய் நன்றி உள்ளது

ராதாரவி அண்ணன் முதலில் நாய் என்று என்னைக் கூறினார் தற்போது பரதேசி நாயே என்று கூறுகிறார். அவர் கூறியதற்காக நான் வருத்தப்படவில்லை நாய் என்றும் நன்றி உள்ளது. அதுபோல நானும் என்றுமே நடிகர் சங்கத்திற்கு விசுவாசமாகவே இருப்பேன். அவர் என்னைத் திட்டியதற்காக நான் அவர் மீது எந்த வழக்கும் போட மாட்டேன்.

மனசாட்சிப்படி

மனசாட்சிப்படி

எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று நான் கேட்கவில்லை ஆனால் உங்கள் மனசாட்சிப்படி வாக்களியுங்கள். கண்டிப்பாக நாங்கள் ஜெயிப்போம் என்று எங்களுக்கு நம்பிக்கை உள்ளது" என்று கூறியிருக்கிறார்.

English summary
Nadigar Sangam Election 2015: In Recent Interview Vishal says that he decided to nominate the post which is against to Radha ravi in nadigar sangam election

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil