twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிகர் சங்க தேர்தலில் 'சர்கார்' விஜய்யின் ஆதரவு யாருக்கு?

    By Siva
    |

    சென்னை: நடிகர் சங்க தேர்தலில் விஜய்யின் ஆதரவு எந்த அணிக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது.

    நடிகர் சங்க தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் நாசர், விஷால், கார்த்தி உள்ளிட்டோர் இருக்கும் பாண்டவர் அணியும், பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றது.

    பாக்யராஜ் நடிகர் சங்க தலைவர் ஆனால் நன்றாக இருக்கும் என்று ரஜினிகாந்தே தெரிவித்துள்ளார். இந்நிலையில் நாடக கலைஞர்களின் ஒட்டுமொத்த ஓட்டுகளையும் பெறும் முயற்சியில் இறங்கியுள்ளது பாண்டவர் அணி.

    விஜய் 63... அஜீத் 59 மாதிரி .. VSP 33.. விஜய் சேதுபதியும் டிரெண்டிங்கில்! விஜய் 63... அஜீத் 59 மாதிரி .. VSP 33.. விஜய் சேதுபதியும் டிரெண்டிங்கில்!

    பாக்யராஜ்

    பாக்யராஜ்

    சர்கார் படத்தின் கதை திருட்டு வழக்கில் திரைப்பட எழுத்தாளர்கள் சங்க தலைவரான பாக்யராஜ் நடுநிலையோடு செயல்பட்டார். சர்கார் படத்தின் கதை தன்னுடைய செங்கோல் கதை என்று வருண் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரின் கதையையும், சர்கார் கதையையும் ஒப்பிட்டுப் பார்த்த பாக்யராஜ இரண்டு கதைகளும் ஒன்றாக இருப்பதாக தெரிவித்தார்.

    வருண் ராஜேந்திரன்

    வருண் ராஜேந்திரன்

    சர்கார் என் கதை, இதை நான் நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்கிறேன் என்றார் முருகதாஸ். நீதிமன்றத்தில் ஆஜரான பாக்யராஜோ செங்கோல், சர்கார் ஆகியவற்றின் கதை ஒன்றே என்று கூறினார். பின்னர் முருகதாஸ் தரப்பு வருணுடன் சமரசம் செய்தது. வருணுக்கு குறிப்பிட்ட தொகையை அளித்ததுடன் டைட்டில் கார்டில் அவரின் பெயரை போட்டு பிரச்சனையை தீர்த்து வைத்தனர்.

    தேர்தல்

    தேர்தல்

    சரி சர்கார் கதை பிரச்சனைக்கும், நடிகர் சங்க தேர்தலுக்கும் என்ன தொடர்பு என்று கேட்கலாம். நடிகர் சங்க தேர்தலில் பெரிய நடிகர்களின் ஆதரவை இரண்டு அணிகளும் கோரி வருகிறது. கோலிவுட்டின் முன்னணி நடிகரான விஜய்யின் ஆதரவு எந்த அணிக்கு என்பதை தெரிந்து கொள்ளும் ஆவல் அனைவருக்கும் உள்ளது.

    விஜய்

    விஜய்

    சர்கார் பிரச்சனையால் பாக்யராஜுக்கு விஜய் ஆதரவளிக்க மாட்டார் என்று நினைக்கலாம். ஆனால் அவர் அப்படிப்பட்டவர் இல்லை. கதை திருட்டு பிரச்சனை உச்சத்தில் இருந்தபோதே, முருகதாஸ் தான் நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் அல்லவா அதனால் நீங்கள் வருத்தப்பட வேண்டாம். நீங்கள் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யுங்கள் என்று பாக்யராஜிடம் தெரிவித்திருக்கிறார். அதனால் விஜய் சர்கார் பிரச்சனையை எல்லாம் மனதில் வைத்து செயல்பட மாட்டார்.

    ரஜினிகாந்த்

    ரஜினிகாந்த்

    ரஜினிகாந்த், கமல் ஹாஸன் ஆகியோர் தங்களின் ஆதரவு இந்த அணிக்கு தான் என்று இதுவரை தெரிவிக்கவில்லை. இருப்பினும் கமலின் அமோக ஆதரவு அவரின் நெருங்கிய நண்பரான நாசருக்கு உண்டு என்பது அனைவருக்கும் தெரியும். ரஜினியின் நிலைப்பாடு அவர் அரசியலுக்கு வருவது போன்று எதுவும் தெரியாமல் குழப்பமாகவே உள்ளது.

    English summary
    People are eagerly waiting to know about Vijay's stand in the upcoming Nadigar Sangam election.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X