»   »  சரி, கொஞ்சம் டைம் தர்றோம்... கணக்கை ஒப்படைங்க!- சரத்& கோவுக்கு நடிகர் சங்கம் அவகாசம்

சரி, கொஞ்சம் டைம் தர்றோம்... கணக்கை ஒப்படைங்க!- சரத்& கோவுக்கு நடிகர் சங்கம் அவகாசம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்க கணக்குகளை வரும் 31-ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு சரத்குமார் மற்றும் ராதாரவிக்கு கடிதம் அனுப்பியுள்ளது நடிகர் சங்க நிர்வாகம்.

த்தில் புதிய நிர்வாகிகள் பொறுப்புக்கு வந்துள்ளனர். சங்கத்துக்கு கட்டிடம் கட்டுதல், நட்சத்திர கிரிக்கெட் போட்டி மற்றும் புதிய படத்தில் இளம் நடிகர்கள் சம்பளம் இல்லாமல் நடித்து நிதி திரட்டுதல் போன்ற நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Nadigar Sangam extends time limit to Sarath & co

நடிகர் சங்கத்தின் நிர்வாகத்தை ஏற்றுள்ள நாசர் தலைமையிலான நிர்வாகிகள், சங்கத்தின் வரவு செலவு கணக்குகளை முன்னாள் நிர்வாகிகள் இன்னும் ஒப்படைக்கவில்லை என்று குற்றம்சாட்டினர். கடந்த 17-ந் தேதி நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் சென்னையில் கூடிய சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதில் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் 2014-15-ம் ஆண்டுக்கான வரவு செலவு கணக்குகளையும் நடிகர் சங்க அறக்கட்டளைக்கான 2013-14, 2014-15 ஆண்டுக்கான வரவு-செலவு கணக்குகளையும் சரியான ஆதாரங்களோடு 3 மாதங்கள் கழித்தும் முழுமையாக சமர்ப்பிக்காததால், முன்னாள் நிர்வாகத்தின் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகியோர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து நடிகர் சங்கத்தின் முன்னாள் பொருளாளர் வாகை சந்திரசேகர் கூறும்போது, ‘‘நடிகர் சங்கத்தின் வரவு-செலவு கணக்குகள் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டு விட்டன. அதில் சில விளக்கங்களை தற்போதைய நிர்வாகிகள் கேட்டு இருக்கிறார்கள். அதற்கு பதில் அளிக்க அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. அதற்குள் குற்றப்பிரிவில் புகார் செய்வோம் என்று அறிவித்துள்ளனர். நடிகர் சங்கத்தில் எந்த தவறும் நடக்கவில்லை. சட்ட நடவடிக்கைகளை சந்திக்க தயார்'' என்றார்.

இதையடுத்து முன்னாள் நிர்வாகிகள் கணக்குகளை ஒப்படைக்க 31-ந் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.

English summary
Nadigar Sangam has extended the time to Sarathkumar and team to submit the old accounts of the association.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil