»   »  'சரி சரி மன்னிச்சிட்டோம்... உள்ள வாங்க!' - நடிகர் சங்கம்

'சரி சரி மன்னிச்சிட்டோம்... உள்ள வாங்க!' - நடிகர் சங்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகர் சங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த உறுப்பினர்களை மன்னித்துவிட்டதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.

நடிகர் சங்கத்தில் ஊழல் நடந்துள்ளதாகவும், சங்கத்தில் உறுப்பினர்களான துணை நடிகர்களுக்கு வேலை வழங்கவில்லை என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு சங்க உறுப்பினர்கள் வாராகி, சங்கையா தலைமையில் சங்க உறுப்பினர்கள் சிலர் சென்னையில் அமைந்துள்ள நடிகர் சங்க அலுவலகம் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Nadigar Sangam forgives rebel members

இதைத்தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடிகர் சங்கம் சார்பில், சென்னை போலீஸ் கமிஷனரிடம் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அனைவர் மீதும் பொய்யான தகவல்களை பரப்புவதாக புகார் அளிக்கப்பட்டது. மேலும், அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களை நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கவும் செய்தனர்.

இந்நிலையில், இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட சிலர், தற்போது வாராகி, சங்கையா ஆகியோரின் தூண்டுதலின் பேரிலேயே அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதாகவும், தங்களை மறுபடியும் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக சேர்த்துக் கொள்ளும்படி இன்று நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் விஷாலிடம் கோரிக்கை மனு வைத்துள்ளனர்.

அதன்படி, அவர்கள் அனைவரும் மன்னிக்கப்பட்டு மீண்டும் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வாராகி, சங்கையா ஆகியோரின் தூண்டுதலின் பேரில் 22 உறுப்பினர்கள் நடிகர் சங்கத்தின் மீதும், நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் மீதும் பொய்யான, அவதூறான குற்றச்சாட்டுக்களைப் பரப்பினார்கள். நடிகர் சங்கத்தின் முன்னால் வந்து நின்று கோஷமிட்டார்கள். அவர்களிடம் பொய்யான கையெழுத்து வாங்கி நீதிமன்றத்தில் வழக்கை வாராகி தொடர்ந்துள்ளார்.

அதை அறிந்த அவர்கள் நாங்கள் இதை செய்யவில்லை. எங்களிடம் அவர்கள் தவறாக கையெழுத்து வாங்கியுள்ளார்கள். நாங்கள் நிர்வாகிகளுக்கும், நிர்வாகத்திற்கும் எதிராக அவர்களுடைய தூண்டுதலின் பேரில் தான் சத்தம் போட்டோம். நாங்கள் நிர்வாகிகள் மீதோ, அல்லது நிர்வாகத்தின் மீதேது எந்தவித வழக்கும் கொடுக்கவில்லை. எங்களை மன்னித்தும் திரும்பவும் நடிகர் சங்கத்தில் சேர்த்துக் கொள்ளும்படி நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளரிடம் கடிதத்தை அவர்கள் கொடுத்தனர்.

அதுகுறித்து இன்று நடந்த நடிகர் சங்க செயற்குழு கூட்டத்தில் விவாதித்து அவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது. தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வாராகி அவர்கள் தூண்டுதலால் தொடரப்பட்ட பொய்யான வழக்கிலிருந்து அவர்களை விடுவிக்குமாறு கையொப்பமிட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர். அவர்கள் அம்பிகா, ஜெயந்தி, மல்லிகா, மலர்கொடி, தேவி, உஷா, சந்தியா, ராஜாமணி."

- இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

English summary
Nadigar Sangam has cancelled the punishment against its members those staged protest against the sangam few months back.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil