»   »  கிரிக்கெட் சங்கத் தலைவர் சீனிவாசனுடன் நடிகர் சங்கத்தினர் சந்திப்பு!

கிரிக்கெட் சங்கத் தலைவர் சீனிவாசனுடன் நடிகர் சங்கத்தினர் சந்திப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டட நிதிக்காக நிதி திரட்ட நட்சத்திர கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஏப்ரல் 17-ல் நடைபெற உள்ளது.

சென்ற மாதம் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றபோது பேசிய விஷால், "சங்க வளாகத்தில் புதிய கட்டடம் அமைப்பதற்கான முதல் கட்டப் பணி தொடங்கியுள்ளது. இதற்கான நிதியை பல வகைகளில் திரட்ட முடிவு எடுத்துள்ளோம். முதல் கட்ட நிதிக்காக வரும் ஏப்ரல் 10-ல் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இதில் ஒட்டுமொத்த திரைத்துரையினரும் பங்கேற்க உள்ளனர்," என்று கூறினார்.

Nadigar Sangam functionaries meet TNCA's Srinivasan

இதன் அடுத்தக்கட்ட முயற்சியாக, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் என். சீனிவாசனை, நடிகர் சங்க நிர்வாகிகள் சந்தித்துப் பேசினார்கள்.

அதன்படி கிரிக்கெட் போட்டி நடக்கும் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 10-ம் தேதிக்குப் பதிலாக ஏப்ரல் 17 அன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.

English summary
Nadigar Sangam functionaries have met N Srinivasan of TNCA today and discussed on their proposed celebrity cricket match on April 17.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil