»   »  ஜெயலலிதாவுக்கு நடிகர் சங்க நிர்வாகிகள் அஞ்சலி: கவுதமி கண்ணீர் அஞ்சலி

ஜெயலலிதாவுக்கு நடிகர் சங்க நிர்வாகிகள் அஞ்சலி: கவுதமி கண்ணீர் அஞ்சலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு நடிகர் சங்க நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

உடல் நலக்குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி முதல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் ஜெயலலிதா நேற்று இரவு காலமானார்.

Nadigar Sangam functionaries pay tribute to Jaya

ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்ட அவரின் உடலுக்கு அரசியல் தலைவர்களும், பொது மக்களும் அஞ்சலி செலுத்தினார்கள். இந்நிலையில் நடிகர் சங்க நிர்வாகிகள் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினர்.

சங்க தலைவர் நாசர் தலைமையில் பொருளாளர் கார்த்தி, பொன்வண்ணன், குட்டி பத்மினி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். நடிகர்கள் சத்யராஜ், சிபிராஜ், ஸ்ரீமன், ஒய்.ஜி. மகேந்திரன், மனோபாலா, நடிகை கோவை சரளா ஆகியோரும் அம்மாவுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

மேலும் நடிகை கவுதமி நேரில் வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவரான நடிகர் சரத்குமாரும் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினார்.

English summary
Nadigar Sangam functionaries paid tribute to CM Jayalalithaa who passed away after brief illness.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil