»   »  வறுமையில் வாடிய ரங்கம்மாள் பாட்டிக்கு உதவிய நடிகர் சங்கம்

வறுமையில் வாடிய ரங்கம்மாள் பாட்டிக்கு உதவிய நடிகர் சங்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
ரங்கம்மாள் பாட்டிக்கு உதவிய நடிகர் சங்கம்

தமிழில் பல்வேறு திரைப்படங்களில் பாட்டியாக நடித்து புகழ் பெற்றவர் திருமதி ரங்கம்மாள் பாட்டி. இவர் தமிழ் திரைப்படங்களில் அவ்வபோது சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து அதன் மூலம் வரும் 500 ரூபாயைக் கொண்டு குடும்பத்தை நடத்தி வந்தார்.

சில நாட்களுக்கு முன்பு ரங்கம்மாள் பாட்டி மெரீனா கடற்கரையில் பிச்சை எடுத்து வந்ததாக செய்தி ஒன்று பரவி வந்தது. இந்த தகவல் அறிந்த தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள், அவரை பற்றி விசாரித்து மெரினா கடற்கரைக்கு பாட்டியை தேடி சென்றனர். அங்கே சென்ற போது தான் ரங்கம்மாள் பாட்டி பிச்சை எடுக்கவில்லை என்பதும் படபிடிப்பு தளத்தில் அவருக்கு கிடைத்த 500ருபாய் போதாததால் மெரினா கடற்கரையில் Ear Phones போன்ற Electronic பொருட்களை விற்று அதன் மூலம் வரும் வருவாயை கொண்டு வாழ்கையை நடத்தி வந்திருக்கிறார் என்பதும் தெரியவந்தது.

Nadigar Sangam helps to Rangammal Patti

எனவே தென்னிந்திய நடிகர் சங்கம் அவருக்கு உதவித் தொகையாக ரூபாய் 5000 வழங்கியது. ரங்கம்மாள் பாட்டி FEFSI அமைப்பின் கீழ் உள்ள ஜூனியர் ஆர்டிஸ்ட் சங்கத்தின் உறுப்பினர். ஒருவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினராக இருந்தால் மட்டும்தான் சங்கத்தின் மூலம் அவருக்கு உதவி தொகையை வழங்க முடியும். ஆனால் பாட்டியின் வறுமையை கருத்தில் கொண்டு தென்னிந்திய நடிகர் சங்கம் அவருக்கு இந்த உதவியைச் செய்துள்ளது. மேலும் அவருக்கு எந்த வகையில் உதவலாம் என ஆலோசித்து வருவதாகவும் நடிகர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Nadigar Sangam helps to Rangammal Patti

இதை போன்று மருத்துவ உதவி இல்லாமல் தவித்துவந்த நடிகை பிந்துகோஷ்க்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ரூபாய் 5000 உதவி தொகையாக சென்ற வாரம் வழங்கியது நினைவிருக்கலாம். பிந்துகோஷும் தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர் அல்ல. இருந்தாலும் அவரது தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு அவரை உறுப்பினராக இலவசமாக சங்கத்தில் சேர்த்து இந்த உதவி தொகையை வழங்கியுள்ளது.

English summary
Nadigar Sangam has helped to senior actress Rangammal Patti after heard her poor family condition.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil