»   »  விஷாலுக்கும் சிம்புவுக்கும் தான் பகையாமே? பின்னணியில் நயன்தாரா?

விஷாலுக்கும் சிம்புவுக்கும் தான் பகையாமே? பின்னணியில் நயன்தாரா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் தீவிரம் காட்ட காரணம் சரத்குமார் உடனான பெர்சனல் பகை என்று பகிரங்கமாக சொன்னார் சிம்பு. விஷால் கேப்டன் ஆன உடன் கிரிக்கெட் டீமை விட்டே வெளியேறியதாகவும் சொன்னார்.

உண்மையிலேயே சிம்புவுக்கும் விஷாலுக்கும்தான் பெர்சனல் பகை என்கின்றனர். விஷால் மீதான சிம்புவின் கோபத்திற்கு காரணம் நயன்தாரா என்றும் கிசு கிசுகிசுக்கிறது கோடம்பாக்க வட்டாராம்.

சமாதானம் பேச வேண்டும் என்றுதான் பாக்யராஜ், பூர்ணிமா ஆகியோரை கூப்பிட்டார் ராதிகா. ஆனால் பிரஸ்மீட்டில் சிம்பு பேசியது சமாதானம் என்ற வார்த்தையையே அடித்து நொறுக்கிவிட்டது. அந்த அளவிற்கு வாடா போடா என்கிற தொனியில் பேசி குழப்பத்தை மேலும் அதிகரித்து விட்டார் சிம்பு.

விஷால் மீது கோபம் ஏன்?

விஷால் மீது கோபம் ஏன்?

சிம்புவிற்கு விஷால் மீதிருந்த பர்சனல் பகையை இப்படி திட்டி தீர்த்து விட்டார் என்கின்றனர் விசயம் அறிந்தவர்கள். சத்யம் படத்தில் விஷாலுடன் நயன்தாரா நடித்த போதே ஆரம்பித்து விட்டதால் புகைச்சல்.

பார்ட்டியில் வெடித்த மோதல்

பார்ட்டியில் வெடித்த மோதல்

நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடந்த பார்ட்டியில் பங்கேற்ற சிம்பு, நயன்தாரா விஷால் ஜோடியைப் பார்த்து கண் சிவந்து வெளியேறினாராம். அடுத்தநாளே நட்சத்திர கிரிக்கெட் அணியில் இருந்தும் வெளியேறிவிட்டாராம். ஆனால் பிரஸ்மீட்டில் கிரிக்கெட் டீமில் இருந்து வெளியேறியதற்கு வேறு காரணம் சொன்னார்.

நீடிக்கும் பகை

நீடிக்கும் பகை

இந்த பகைதான் இதுநாள் வரைக்கும் தீராத பகையாக நீடித்து வருகிறது. அதனால்தான் நீ யார் என் குடும்பத்தை பிரிப்பதற்கு என்று கேட்கும் அளவிற்கு வந்திருக்கிறது என்கின்றனர். இதே சிசிஎல் பிரச்சினையில்தான் சரத்குமாருக்கும் விஷாலுக்கும் இடையே மோதல் ஏற்பட காரணம் என்கின்றனர்.

சாதி மத அடையாளமில்லை

சாதி மத அடையாளமில்லை

அதே நேரத்தில் விஷால் ரெட்டி என்று ராதிகா சொன்னதற்கு பதில் சொல்லியுள்ள விஷால், எனக்கு ராதிகா மேடம் மேல தனிப்பட்ட கோபம் இல்லீங்க. என்னைபோயி 'விஷால் ரெட்டி' என்று ராதிகா சொல்லி இருக்கார். நல்லது செய்யறதுக்கு சாதி, மதம்னு எந்த அடையாளமும் தேவை கிடையாதுங்க. நடிகர் சங்கத்துல சாதின்கிற பேச்சுக்கே இடமில்லை என்று கூறியுள்ளார்.

தம்பி சிம்புவுக்கு நன்றி

தம்பி சிம்புவுக்கு நன்றி

முதல்ல ராதிகா மேடத்துக்கு ஒரு உண்மை தெரியணும். நம்ம நடிகர் சங்கத்தோட உண்மையான பேர் 'தென்னிந்திய நடிகர் சங்கம்'. அதிலேயே எல்லாம் அடங்கி இருக்குன்னு எல்லோருக்கும் தெளிவா தெரியும். அடுத்ததா என்னை வாடா போடா என்று பேசிய அந்த தம்பி சிம்புவுக்கு என்மேல என்ன கோபமோ? அவர் பாட்டுக்கு இஷ்டத்துக்கு என்னைப்பத்தி ஏசினார்.

எனக்கு கோபமில்லை

எனக்கு கோபமில்லை

அவரோட பேச்சைக் கேட்டு எனக்கு சிம்பு தம்பிமேல கோபமே வரலீங்க. என்னைப்பத்தி வாய்க்கு வந்தமாதிரி இஷ்டத்துக்கு கேவலமா பேசின சிம்புவோட சிறப்புரைக்கு நன்றிங்க. ஏன்னா தம்பியோட பேச்சுக்கு பிறகுதான் பாண்டவர் அணியோட வெற்றி பக்கா பிரகாசமா தெரியுது.

பிரகாசமான வெற்றி

பிரகாசமான வெற்றி

சாதாரணமா வெற்றிபெற இருந்த எங்க அணியை மாபெரும் வெற்றிபெற உதவின மேடம் ராதிகா, தம்பி சிம்புவோட ஏச்சுப் பேச்சுக்கு ரொம்ப நன்றி என்று சொல்லிவிட்டு பிரச்சாரத்திற்கு கிளம்பிவிட்டார் விஷால்.

English summary
Nadigar Sangam election set to happen in October 18th, actor Simbu thrashed Vishal of the Pandavar Ani. Here is the background story of simbu’s speech against Vishal.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil