»   »  நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் மோதல்: 20 பேர் மீது வழக்குப்பதிவு

நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் மோதல்: 20 பேர் மீது வழக்குப்பதிவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தின்போது மோதலில் ஈடுபட்ட 20 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னை தி. நகரில் உள்ள நடிகர் சங்க மைதானத்தில் நேற்று நடைபெற்றது. அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று சங்க பொதுச் செயலாளர் விஷால் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

Nadigar sangam meet clash: 20 people booked

இந்நிலையில் முன்னாள் நிர்வாகிகள் சிலரின் ஆதரவாளர்கள் அழைப்பிதழ் இல்லாமல் கூட்டத்திற்கு வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்தியபோது மோதல் ஏற்பட்டது. நிலைமை கையை மீறிச் சென்றதும் போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

இதற்கிடையே மைதானத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த நடிகர் கருணாஸின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. இது குறித்து கருணாஸின் கார் டிரைவர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

மோதல் குறித்து நடிகர் ஜே.கே. ரித்திஷ் சார்பிலும் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் இருதரப்பை சேர்ந்த 20 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

English summary
Police have filed case against 20 persons under five different sections in connection with the clash that broke out during Nadigar Sangam's annual general body meet.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil