»   »  நட்சத்திரக் கிரிக்கெட்: ரஜினி, கமல் ஆஜர்!

நட்சத்திரக் கிரிக்கெட்: ரஜினி, கமல் ஆஜர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சங்கத்தின் நட்சத்திரக் கிரிக்கெட் போட்டியை ரஜினி, கமல் இருவரும் தொடங்கி வைத்தனர்.

நடிகர் சங்கம் நடத்தும் நட்சத்திரக் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சற்றுமுன் தொடங்கியது.சுமார் 8 அணிகள் பங்குபெறும் இந்தப் போட்டியில் 8 அணிகளின் கேப்டன் மற்றும் அணிகளின் பெயர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டன.

Nadigar Sangam: Natchathira Cricket Starts

இந்நிலையில் இன்று தொடங்கிய இப்போட்டியை ரஜினி, கமல் என தமிழ் சினிமாவின் 2 முன்னணி நடிகர்களும் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.

முதல் போட்டியில் சூர்யாவின் சென்னை சிங்கம்ஸ் அணியை எதிர்த்து சிவகார்த்திகேயனின் திருச்சி டைகர்ஸ் அணி ஆடுகிறது. சூர்யாவின் சென்னை சிங்கம்ஸ் அணி டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தது.

முன்னதாக 8 அணிகளில் யார், யாருடன் மோதுவது என்பதை கமல், ரஜினி இருவரும் இணைந்து தேர்வு செய்தனர்.

நகைச்சுவை நடிகர்களான எஸ்.வி.சேகர், ஒய்.ஜி.மகேந்திரன், பாலாஜி, சின்னி ஜெயந்த் ஆகியோர் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றனர்.

English summary
Natchathira Cricket: Chennai Singams Won the Toss elected to Field.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil