»   »  நட்சத்திர கிரிக்கெட் கணக்குதானே கேட்டீங்க... இந்தாங்க..! - நடிகர் சங்கம் அதிரடி

நட்சத்திர கிரிக்கெட் கணக்குதானே கேட்டீங்க... இந்தாங்க..! - நடிகர் சங்கம் அதிரடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சங்கத்தின் கணக்கு வழக்குகளை அதன் உறுப்பினர்கள் மட்டுமல்ல, மக்கள் அனைவருமே தெரிந்து கொள்ளும் வகையில் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது சங்க நிர்வாகம்.

Nadigar Sangam releases income and expenditure details publicly

தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசாக வேட்டி-சேலை வழங்கும் நிகழ்ச்சி சென்னை தியாகராயநகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் நேற்று நடந்தது. அப்போது பேசிய விஷால், "நட்சத்திர கிரிக்கெட்டில் ரூ.6 கோடி ஊழல் நடந்து இருப்பதாக குற்றம் சாட்டி உள்ளனர். வரவு, செலவு அனைத்துக்கும் நாங்கள் முறையாக கணக்கு வைத்து இருக்கிறோம். நடிகர் சங்க நிலம் சார்ந்த அனைத்து வில்லங்கத்தையும் தீர்த்து இருக்கிறோம். கடன்களை அடைத்து இருக்கிறோம். நட்சத்திர கிரிக்கெட் போட்டி மூலம் எவ்வளவு வருமானம் வந்தது. எவ்வளவு செலவு ஆகி இருக்கிறது. வங்கி இருப்பில் எவ்வளவு தொகை இருக்கிறது உள்ளிட்ட கணக்கு விவரங்கள் அனைத்தையும் சங்கத்தின் பொருளாளர் கார்த்தி இன்று நடிகர் சங்கத்தின் இணையதளத்தில் பகிரங்கமாக வெளியிடுவார். நடிகர்களும் பொதுமக்களும் அதனை பார்க்கலாம்", எனக் கூறி இருந்தார்.

அதன் படி நட்சத்திர கிரிக்கெட் போட்டி வரவு - செலவு கணக்குகள் இன்று நடிகர் சங்கத்தின் சமூக இணைய தளத்தில் வெளியிடபட்டு உள்ளது. அந்த வரவு செலவு கணக்குப் பட்டியல் இதோ...

செலவு கணக்கு 1

செலவு கணக்கு 2

English summary
The Nasser - Vishal lead Nadigar Sangam has released income and expenditure details publicly today.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil