»   »  நாடக நடிகர்கள் மீது 'நாசர் அன்ட் கோ'வுக்கு இவ்வளவு அக்கறையா...!

நாடக நடிகர்கள் மீது 'நாசர் அன்ட் கோ'வுக்கு இவ்வளவு அக்கறையா...!

Posted By:
Subscribe to Oneindia Tamil

உண்மையிலேயே ஆச்சர்யமாகத்தான் இருந்தது அந்த செய்தியைக் கேள்விப்பட்ட போது.

பொதுவாகவே முதல்வர் போன்ற அதிகாரமிக்க பொறுப்பிலிருப்பவர்களைச் சந்திக்கும் போதெல்லாம் ஏதாவது ஒரு கோரிக்கையை வைப்பதுதான் நடிகர் சங்கத்தின் வழக்கம். அன்றாடங்காய்ச்சிகளான தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்க முன்னாள் முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டபோது, தங்களுக்கும் ஒரு வாரியம் வேண்டும் என கோரிக்கை வைத்தவர்கள்தான் இவர்கள்.

ஆனால் இந்த முறை அவர்கள் முதல்வர் ஜெயலலிதாவிடம் வைத்த கோரிக்கையைப் பார்த்தால் ஆச்சர்யமாக இருந்தது.

Nadigar Sangam's request to CM Jayalalithaa

தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 1 கோடியே 10 லட்சத்து 25ஆயிரம் ரூபாய் காசோலையை நடிகர் சங்கம் சார்பில் வழங்கப்பட்டது.

இந்தத் தொகை நடிகர் சங்கத்துடையது அல்ல. நடிகர் நடிகைகள் கொடுத்த பணம் அது. அதைத்தான் மொத்தமாக சேர்த்துக் கொடுத்திருக்கிறார்கள்.

இந்த காசோலை வழங்கும் நிகழ்ச்சியின்போது நடிகர் சங்கம் சார்பில் முதல்வரிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை இது:

"பொதுவாக தேர்தல் நடக்கும் காலகட்டத்தில் அது சட்டமன்ற
தேர்தலாக இருந்தாலும் , பாராளுமன்ற தேர்தலாக இருந்தாலும் இந்த
காலகட்டத்தில் வெளியூரில் இருக்கும் நடிகர் நடிகர்கள் தங்கள் ஊரை விட்டு வெளியூர்களுக்கு சென்று நாடகம் நடிப்பது, மற்றும் நாடகம் அமைப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. இதனால் தேர்தல் என்று அறிவிக்கப்பட்ட 3மாத காலகட்டம் அவர்கள் வாழ்வாதாரம் சுத்தமாக பாதிக்கப்படுகிறது.

பொதுவாகவே நாடகம் என்றால் ஒரு குறிப்பிட்ட சீசனில் மட்டும் தான் வரவேற்பு இருக்கும். ஆறு மாத காலகட்டம் அவர்களுக்கு வேலை இருக்கும் அதன் பின்பு தொடர்ச்சியாக ஒரு ஆறு மாத காலகட்டத்துக்கு வேலை இருக்காது. அந்த ஆறு மாதம் முடிவடைந்து வேலை வரும் இந்த நேரத்தில் அவர்களுக்கு தேர்தலினால் தடை வந்தால் ஒரு வருட காலம் அவர்களுக்கு வேலை இல்லாமல் போகும் சூழ்நிலை உண்டாகிவிடுகிறது. எனவே இந்த மாதிரி ஒரு காலகட்டத்தில் அவர்கள் நாடகம் போடுவதற்கு நீங்கள் அனுமதி தரவேண்டும்."

இதற்கு பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா, "தமிழக அரசு எப்போதுமே அப்படி ஒரு விஷயத்தை செய்தது இல்லை. என்றுமே தமிழக அரசு நாடக நடிகர்களுக்கு உதவியாகத்தான் இருந்துள்ளது. அது போல் இருந்தால் தமிழக அரசு தலையிட்டு கண்டிப்பாக நாடக நடிகர்களுக்கு உதவி செய்யும். அதே போல் தேர்தல் ஆணையத்தின் சட்டதிட்டத்துக்கு உட்பட்டு அது நடைபெறுகிறது என்றால் அந்த காலகட்டத்தில் நீங்கள் இதை ஒரு கோரிக்கையாக வைத்தால் இது சரியாக இருக்கும்," என்று கூறியுள்ளார்.

English summary
Nadigar Sangam has urged CM Jayalalithaa to revoke the ban on drama artists during election time.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil