»   »  'தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் நடிகர் சங்கம் தலையிடாது!'

'தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் நடிகர் சங்கம் தலையிடாது!'

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் நடிகர் சங்கம் தலையிடாது என்று நடிகர் சங்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து நடிகர் சங்கம் இன்று வெளியிட்ட அறிக்கை:

கடந்த சில நாட்களாக பத்திரிக்கை ஊடகம் மற்றும் திரைத்துறையினர் மத்தியில் தயாரிப்பளர் சங்க தேர்தலில் நடிகர் சங்கம் தலையிடப் போவதாக பரபரப்பான செய்திகள் வந்தபடி உள்ளன. அது பற்றி எங்களின் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்த கடந்த செயற்குழுவில் விவாதிக்கப்பட்டது.

Nadigar Sangam's statement on Producers Council election

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் என்பது மிகப் பெரிய அமைப்பு. திரை உலகின் முதுகெலும்பு போன்ற அதனது தலைமையை தீர்மானிக்க வேண்டியது அதைச் சார்ந்த உறுப்பினர்கள்தான். அதில் ஓட்டுரிமை இல்லாத தென்னிந்திய நடிகர் சங்கம் எக்காரணத்தை முன்னிட்டும் தலையிடாது.

ஆனால் அதே சமயம் - எங்களது உறுப்பினராக உள்ள நடிகர்கள் மற்றும் தற்போதைய நிர்வாகத்தில் பொறுப்பில் உள்ள நடிகர்கள் பலரும் தங்களது சங்கத்தில் தயாரிப்பாளர்களாக உள்ள நிலையில் தயாரிப்பாளர் சங்கம் பற்றி அவர்களின் நிலைப்பாடு மற்றும் ஊடக பேட்டி தேர்தல் பற்றி அவர்கள் எடுக்கும் முடிவுகளை உங்கள் உறுப்பினராக கருதியே நீங்கள் அணுகவேண்டும்.

நடிகர் சங்கத்துடன் அதை தொடர்புப்படுத்தி பார்க்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

அதேபோல் நீங்களும் தென்னிந்திய நடிகர் சங்கத்தை தொடர்புப்படுத்தி பேசுவதைத் தவிர்க்கும்படி உங்களது உறுப்பினர்களுக்கு தெரிவிக்க வேண்டுகிறோம்.

தங்களின் சங்கம் சுதந்திரமாக தேர்தலை நடத்தி - அதன்மூலம் வரும் நிர்வாகத்துடன் இணைந்து செயல்படவே நாங்கள் விரும்புகிறோம்.

இதுவே எங்கள் நிலைப்பாடு."

இவ்வாறு தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Nadigar Sangam has clarified their stand in Tamil Film Producers Council election.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil