»   »  முதல் தடவையா கிரிக்கெட் நடத்தினோம்.. குத்தம் குறையிருந்தா மன்னிச்சிடுங்க!- நடிகர் சங்கம்

முதல் தடவையா கிரிக்கெட் நடத்தினோம்.. குத்தம் குறையிருந்தா மன்னிச்சிடுங்க!- நடிகர் சங்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சங்க நிர்வாகப் பொறுப்பேற்று முதல் முறையாக நட்சத்திர கிரிக்கெட் நடத்தியுள்ளோம். இதில் குற்றம் குறை இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள் என்று நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நடிகர் சங்க செயலாளர் விஷால் வெளியிட்டுள்ள அறிக்கை:

கடந்த ஏப்ரல் மாதம் 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று தென்னிந்திய நடிகர் சங்கம், சேப்பாக்கம் மைதானத்தில் நடத்திய ‘லெபரா நட்சத்திரகிரிக்கெட்' போட்டி திட்டமிட்டபடி வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந் நிகழ்ச்சியில் மொழி, அரசியல், புகழ், வெற்றி இவைகள் அனைத்தையும் மறந்துநாங்கள் திரை கலைஞர்கள் என்ற உணர்வோடு அனைவரும் கலந்து கொண்டார்கள்.

Nadigar Sangam's thanks giving letter

தமிழ் திரையுலக ஜாம்பவான்களான ரஜினி, கமல், உள்ளிட்டஅனைத்து நடிகர் நடிகைகள், நாடக கலைஞர்கள் மட்டுமல்லாது, வெளி மாநிலங்களை சார்ந்த ஜாம்பவான்களான பாலகிருஷ்ணா, வெங்கடேஷ், நாகார்ஜூனா, ராஜேந்திர பிரசாந்த், மம்மூட்டி, சிவராஜ் குமார், அம்பரீஷ், ரவீச்சந்திரன், சுதீப் மற்றும் பலரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தது மிக மிக முக்கியமான வரலாற்று பதிவாகும்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எங்களை ஊக்குவித்த, உதவிய அத்தனைப் பேருக்கும் நன்றி.

இந்த பொறுப்பிற்கு நாங்கள் புதியவர்கள். நல்லது செய்ய வேண்டும் என்ற அதீதமான ஆர்வம் மட்டுமே எங்களிடம் முழுமையாக இருக்கிறது. இந்தநநிகழ்வில் ஏதாவது குறைகள் நடந்திருந்தால் அது எங்களது கவனத்தை மீறி நடந்தவைகள். அதை பொறுத்தருள வேண்டுகிறோம். எதிர் காலத்தில் சீர்செய்து கொள்வோம் என்று தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் அறகட்டளைக்காக தலைவர், செயலாளர், பொருளாளர், துணைத் தலைவர்கள்,அறக்கட்டளை நிர்வாகிகள் கட்டிட குழு கண்காணிப்பாளர்கள் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் நியமன செயற்குழு உறுப்பினர்கள் அனைவரின் சார்பாகவும் எங்களது இதய பூர்வமான நன்றிகளையும் வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்," என்று கூறப்பட்டுள்ளது.

English summary
Nadigar Sangam has conveyed their thanks for the supporters of Natchathira Cricket.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil