»   »  நல்லா பண்றாருய்யா விஷாலு பாலிட்டிக்ஸ்: சரத், ராதாரவி, சந்திரசேகர் குமுறல்

நல்லா பண்றாருய்யா விஷாலு பாலிட்டிக்ஸ்: சரத், ராதாரவி, சந்திரசேகர் குமுறல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கள் பெயரை கெடுக்கவே தங்களை நடிகர் சங்கத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்துள்ளதாக நடிகர்கள் சரத்குமார், ராதாரவி மற்றும் வாகை சந்திரசேகர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

நடிகர் சங்கத்தில் ஊழல் செய்ததாகக் கூறி முன்னாள் தலைவர் சரத்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி மற்றும் பொருளாளர் வாகை சந்திரசேகர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

அவர்கள் பல கோடி ஊழல் செய்துள்ளதாக சங்க செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார்.

வாராகி

வாராகி

சரத்குமார், ராதாரவி மற்றும் வாகை சந்திரசேகர் மீது ஊழல் புகார் தெரிவித்துள்ள விஷால் அன்ட் கோ மீது நடிகர் வாராகி ரூ.3 கோடி ஊழல் புகார் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சரத்குமார்

சரத்குமார்

முதலில் ரூ.150 கோடி, பின்னர் ரூ. 100 கோடி, ரூ.60 கோடி என தற்போது ரூ.1.6 கோடி ஊழல் என்று கூறுவதில் இருந்தே அவர்கள் புகாரில் உண்மை இல்லை என்பது தெரிகிறது என்கிறார் சரத்குமார். என் பெயரை கெடுக்க தான் இந்த புகார். நான் எந்த ஊழலும் செய்யவில்லை அதை ஆதாரத்துடன் நிரூபிக்க தயாராக உள்ளேன். நான் சங்கத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து நீதிமன்றத்திற்கு செல்வேன் என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.

ராதாரவி

ராதாரவி

முதலில் 100 கோடியில ஆரம்பிச்சு ஒன்றரை கோடி ஊழல்னு சொல்லிருக்கான். பத்து பைசா கூட ஊழல் நடக்கவில்லை. 10 வருடமாக முயன்று எங்களின் பெயரை கெடுத்த அவர்களின் பெயர் ஒரேயாண்டில் கெட்டுவிட்டது. தேர்தலில் அவர்களோடு இருந்த வாராகி கூறும் புகாருக்கு என்ன பதில் அளிக்கப் போகிறாங்க? 30 வருடமாக சங்கத்திற்கு உழைத்த என்னை யாராலும் நீக்க முடியாது. நான் யார் என்பது இந்த உலகிற்கே தெரியும் என்கிறார் ராதாரவி.

சந்திரசேகர்

சந்திரசேகர்

ட்ரஸ்ட் விவகாரத்தில் ஊழல் நடந்ததாக விஷால் தரப்பு தெரிவித்துள்ளனர். ட்ரஸ்ட்டை கவனித்தது சரத்குமாரும், ராதாரவியும். கையெழுத்திடும் அதிகாரமும் அவர்களுக்கே இருந்தது. முறைகேடு நடந்ததாக சொல்லப்படும் 2006ம் ஆண்டு நான் அந்த பொறுப்பிலேயே இல்லை. சங்கத்தில் நாங்கள் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் இருந்தாலும் அரசியல் பேசவில்லை. ஆனால் பல கட்சியினர் இருக்கும் சங்கத்தில் விஷால் அரசியல் பண்ணுகிறார். சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து நீதிமன்றத்திற்கு செல்வேன் என சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

English summary
Actors Sarath Kumar, Radharavi and Chandrasekhar said that they did no scam in Nadigar sangam and are ready to prove their innocence.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil