»   »  'ஆடி காருக்கு ரூ10 லட்சம், மாருதிக்கு ரூ 5 லட்சம்'.. நடிகர்களை விளாசும் மீம்ஸ்!

'ஆடி காருக்கு ரூ10 லட்சம், மாருதிக்கு ரூ 5 லட்சம்'.. நடிகர்களை விளாசும் மீம்ஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சங்கத்தின் கட்டிடத்தை கட்ட மொத்த நடிகர்களும்(ஒருசில நடிகர்கள் விதிவிலக்கு) ஒன்றுசேர்ந்து பேட்டை தூக்கியுள்ளனர்.

மற்றொருபுறம் தேர்தல் வருவதால் இந்தக் கிரிக்கெட்டை நடத்தக் கூடாது, தடை செய்யவேண்டும் என்று புகார்களும் குவியத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் நடிகர் சங்கத்தின் பழைய வசனங்களை வைத்து, நெட்டிசன்கள் தங்கள் மீம்ஸ் திறமையை இணையத்தில் அரங்கேற்றி வருகின்றனர்.

நட்சத்திரக் கிரிக்கெட்

நட்சத்திரக் கிரிக்கெட்

நடிகர் சங்கத்தின் கட்டிடத்தை கட்டுவதற்காக அனைத்து நடிக்க, நடிகையரும் ஒன்று சேர்ந்து நட்சத்திரக் கிரிக்கெட் போட்டியை நடத்துகின்றனர். வருகின்ற 17 ம் தேதி இப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. அஜீத், சிம்பு போன்ற நடிகர்கள் இப்போட்டிக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக போட்டிக்கு வரமாட்டார்கள் எனக் கூறப்படுகிறது.

சமூக வலைதளங்களில்

சமூக வலைதளங்களில்

சமூக வலைதளங்களில் இந்த கிரிக்கெட் போட்டியை மக்கள் ஆதரிக்கக் கூடாது என்று தீவிரமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் மக்களின் பிரச்சினைக்கு நடிகர் சங்கம் போராடாது என்று முன்னர் நடிகர்கள் சொன்னதை மறக்காத ரசிகர்கள் தற்போது அதனை வைத்து பல்வேறு மீம்ஸ்களை தெறிக்க விடுத வருகின்றனர்.அவற்றிலிருந்து ஒருசிலவற்றை இங்கே காணலாம்.

விவசாயிகளுக்கு இலவசம்

நடிக, நடிகையருக்கு அனுமதி நுழைவுச்சீட்டு வழங்கப்படும் என்று கலாய்க்க செய்திருக்கிறார் அழகு.

நடிகர் சங்க கடனை

'நடிகர் சங்கத்தின் கடனை அடைப்பது நடிகர்களின் வேலை அது மக்களின் வேலையல்ல' என்று இந்த மீம்ஸ் கூறுகிறது.

மேலும் #BoycottStarCricket என்ற ஹெஷ்டேக்கை உருவாக்கி நட்சத்திரக் கிரிக்கெட்டை புறக்கணிக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.

நட்சத்திரக் கிரிக்கெட்டிற்கு நாலாபுறமும் எதிர்ப்பு பெருகுதே...

English summary
Nadigar Sangam: Star Cricket Match Related Memes.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil