twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தரக்குறைவான பேச்சு: நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்படுகிறார் குமரி முத்து?

    By Shankar
    |

    Kumari Muthu
    சென்னை: தரக்குறைவான விமர்சனம் காரணமாக நடிகர் குமரி முத்துவை சங்கத்திலிருந்து நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    நடிகர் சங்க கட்டிடம் கட்டும் விவகாரத்தில் உண்மைக்கு மாறாக தகவல்களை வெளியிடுவதாகவும், நடிகர் சங்க பொறுப்பில் உள்ளவர்களை பதவியில் இருந்து விலகும்படி கடிதங்கள் எழுதுவதாகவும், வெளியில் தரக்குறைவான விமர்சனங்களை வைப்பதாகவும் அவர் மீது புகார் கூறப்பட்டன.

    இதையடுத்து குமரிமுத்துவிடம் விளக்கம் கேட்டு நடிகர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியது. சங்கத்தின் பொதுச் செயலாளர் ராதா ரவி இந்த நோட்டீசை அனுப்பினார்.

    இதற்கு குமரி முத்து பதில் அனுப்பினார். 44 ஆண்டு காலமாக சினிமாவில் இருக்கிறேன். யாரையும் அவமதிக்கவில்லை. என்னைப் போல் நிறைய பேர் கருத்து வெளியிட்டுள்ளனர். அவர்களுக்கு இது போல் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டதா என்று குமரிமுத்து கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த விளக்க கடிதம் திருப்தி அளிப்பதாக இல்லை என்று நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது. வருகிற 28-ந் தேதி நடிகர் சங்க செயற்குழு கூடுகிறது. இதில் குமரிமுத்து விவகாரம் பற்றி விவாதிக்கப்படுகிறது. கூட்டத்தின் முடிவில் குமரிமுத்து தற்காலிகமாக நீக்கப்படலாம் என்று சங்க நிர்வாகி ஒருவர் தெரிவ்த்தார்.

    English summary
    Actor Kumari Muthu may be suspended from Nadigar Sangam for his worst comments on Sangam's activities.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X