twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மக்கள் விரோத ஹைட்ரோ கார்பன் திட்டத்தை உடனே ரத்து பண்ணுங்க! - நடிகர் சங்கம்

    By Shankar
    |

    சென்னை: மக்கள் விரோத ஹைட்ரோ கார்பன் திட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டும் என நடிகர் சங்கம் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

    இதுகுறித்து சங்கம் விடுத்துள்ள அறிக்கை:

    தற்போது தமிழகம் மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கான நீர் இன்றி இயற்கையின் கோரப் பிடியில் சிக்கி தவிக்கிறது. எதிர்வருகிற காலங்களும் மழை வந்து நம்பிக்கையூட்டுவதாக இல்லாமல் பயப்படுத்துகிறது. இந்நிலையில் 'மீத்தேன்' என்கின்ற திட்டம் 'ஹைட்ரோ கார்பன்' திட்டமாக மறுவடிவமெடுத்து புதுக்கோட்டை, தஞ்சை பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் செயல்படுத்துவதற்காக மத்திய அரசு திட்டமிட்டு இருப்பது மக்களிடையே பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

    Nadigar Sangam urges to withdraw Hydro Carbon scheme

    நாட்டிற்கும், வளர்ச்சிக்கும் உகந்த திட்டமாக இருந்தாலும், விவசாய நிலங்களை அழித்தும் அதற்கான பாதிப்பை உண்டாக்கியும் ஏற்படுத்தும் திட்டம் எதுவுமே ஏற்புடையதல்ல. அத்தோடு, இதுபோன்ற திட்டங்களைச் செயல்படுத்தும்போது, அப்பகுதி மக்களிடையே விளக்கி ஒப்புதல் பெற்ற பிறகே செயல்படுத்தவேண்டும்.

    களங்மிறங்கி போராடும் மக்களின் உணர்வுகளுக்கு அழுத்தம் தரும் வகையில் நாங்கள் அவர்களுக்கு என்றும் துணை நிற்போம் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.

    மக்களும், தமிழக அரசும் வைத்துள்ள இந்த கோரிக்கையை ஏற்று இத்திட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டும் என்று தென்னிந்திய நடிகர் சங்கம் மத்திய அரசை கேட்டுக் கொள்கிறது.

    -இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    English summary
    Nadigar Sangam has urged the center to withdraw Hydro Carbon project from Tanjavur and Pudukkottai districts.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X