»   »  காவிரி, இலங்கைத் தமிழர் பிரச்சினையில் நடிகர் சங்கம் போராடாது! - விஷால்

காவிரி, இலங்கைத் தமிழர் பிரச்சினையில் நடிகர் சங்கம் போராடாது! - விஷால்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: காவிரி, இலங்கைத் தமிழர் விவகாரம் போன்றவற்றில் நடிகர் சங்கம் போராடாது. அதே நேரம் தனிப்பட்ட முறையில் எனது ஆதரவு உண்டு என்று விஷால் கூறியுள்ளார்.

சென்னையில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் விஷால் கூறுகையில், "பாண்டிராஜ் இயக்கத்தில் 'கதகளி' படத்தில் நடித்து வருகிறேன். படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. அடுத்ததாக முத்தையா இயக்கத்தில் 'மருது'வில் நடிக்கிறேன். அதனைத் தொடர்ந்து 'சண்டக்கோழி 2' நடிக்கவிருக்கிறேன்.

Nadigar Sangam will nor interfere in any political issue, says Vishal

'மருது' படத்தில் ராதாரவியுடன் நடிக்கவிருப்பதாக செய்தி வருகிறது. அது இன்னும் முடிவாகவில்லை. அவ்வாறு நடிக்கும் சூழ்நிலை வந்தால் கண்டிப்பாக நடிப்பேன். நடிகர் சங்கம் என்பது வேறு, நடிப்பு என்பது வேறு. ராதாரவியுடன் மட்டுமல்ல சரத்குமாருடன் கூட இணைந்து நடிப்பேன்.

அடுத்தாண்டும் எனக்கு தலை தீபாவளி கிடையாது. முதலில் நடிகர் சங்க கட்டிடம் கட்ட வேண்டும் என்பதே என் முதல் குறிக்கோள். நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் சரத்குமார் நடிகர் சங்க இடத்தின் பத்திரங்களை ஒப்படைத்துவிட்டார். இப்போது கணக்கு வழக்குகளைச் சரிபார்த்து வருகிறோம். 2017-ம் ஆண்டுக்குள் கட்டிடம் கண்டிப்பாக கட்டி விடுவோம்," என்றார்.

English summary
Actor Vishal says that Nadigar Sangam will not stage any protest for Cauvery or Srilankan Tamil issue.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil