»   »  தென்னிந்திய ​​ஃபிலிம் சேம்பர் புதிய நிர்வாகிகளுக்கு நடிகர் சங்கம் வாழ்த்து!

தென்னிந்திய ​​ஃபிலிம் சேம்பர் புதிய நிர்வாகிகளுக்கு நடிகர் சங்கம் வாழ்த்து!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தென்னிந்திய ​​ஃபிலிம் சேம்பருக்கு நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கும் நடிகர் சங்கம் தனது வாழ்த்து தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சேம்பருக்கு புதியதாக தேர்ந்தெடுக்க பட்டுள்ள தலைவர் எல் சுரேஷ், துணைத் தலைவர்களாக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள ஏ சாய்பிரசாத், ஏ கணேஷ், விபி மாதவன் நாயர், ஏவிஎம்கே ஷண்முகம், கௌரவ செயலாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரவி கொட்டாரக்கரா, என் ராமசாமி மற்றும் பொருளாளர் கே கிருஷ்ண ரெட்டி ஆகியோரை தென்னிந்திய நடிகர் சங்கம் மனமார வாழ்த்துவதோடு தங்களது சங்கத்திற்கு முழு ஒத்துழைப்பையும் ஆதரவையும் தெரியப்படுத்திக்கொள்கிறோம்.

Nadigar Sangam wishes Film Chamber new office bearers

மேலும் செயற்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கபட்டுள்ள தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு உறுப்பினரான எங்களது குட்டி பத்மினி உள்பட அனைவருக்கும் எங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

English summary
Nadigar Sangam has conveyed its wishes to the new office bearers of Film Chamber

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil