கல்கி 2வில் ரஜினிகாந்த்?.. கமல்ஹாசனை தொடர்ந்து சூப்பர் ஸ்டாரையும் கொக்கிப் போடும் நாக் அஸ்வின்!
சென்னை: பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியான கல்கி 2898 ஏடி படத்தில் கமல்ஹாசன் மெயின் வில்லனாக நடித்து மிரட்டியிருந்தார். இந்நிலையில், நாக் அஸ்வின் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஒரு படத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் டோலிவுட் திரையுலகத்தையே கலக்கிக் கொண்டிருக்கிறது.
நடிகையர் திலகம் (மகாநடி) படத்தின் மூலம் அறிமுகமான நாக் அஸ்வின், பழம்பெரும் நடிகை சாவித்ரியை கீர்த்தி சுரேஷை வைத்து அப்படியே கண்முன் கொண்டு வந்து கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருதையும் பெற்றுத் தந்தார்.

தெலுங்கில் ராஜமெளலியை தொடர்ந்து 1000 கோடி வசூல் படத்தை தன்னாலும் தர முடியும் என்பதை கல்கி 2898 ஏடி படத்தின் மூலம் நிரூபித்துக்காட்டினார். இந்நிலையில், ரஜினிகாந்தை வைத்து அவர் ஒரு படம் இயக்கினால் அது வேறலெவலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜமெளலிக்கு நோ: ஏற்கனவே ரஜினிகாந்தை வைத்த தான் ஒரு படம் இயக்கினால் முதல் சீன் முதல் கடைசி சீன் வரை தியேட்டரில் விசில் பறக்கும் என ராஜமெளலியே சூப்பர் ஸ்டாரை வைத்து படம் இயக்க வேண்டும் என்கிற தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தியிருந்தாலும், உடல்நலனை கருத்தில் கொண்டு ரொம்ப ரிஸ்க்கான பெரிய படங்களை ரஜினிகாந்த் தொடர்ந்து தவிர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினியும் கமலும் சேர்ந்து: கூலி படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கப் போகிறார் என்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் அந்த படத்தைத் தயாரிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், இருவரையும் இணைக்கும் முயற்சியில் நாக் அஸ்வினும் இறங்கியிருப்பதாக கூறுகின்றனர்.
கல்கி 2வில் சூப்பர் ஸ்டார்?: கல்கி 2898 ஏடி படத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, சோபனா, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்நிலையில், கல்கி 2ம் பாகத்தில் மகாபாரதத்தில் இருந்து ஒரு முக்கிய கதாபாத்திரத்தை இறக்க நாக் அஸ்வின் திட்டமிட்டு இருப்பதாகவும் அதில் ரஜினிகாந்தை நடிக்க வைக்கவும் அவர் முடிவு செய்திருப்பதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. சமீபத்தில், ரஜினியை சந்தித்து நாக் அஸ்வின் சொன்ன கதை அவருக்கு ரொம்பவே பிடித்து விட்டது என்கின்றனர். ஆனால், இது தனிப்படமா? அல்லது கல்கி 2வா? என்பது உறுதியாக தெரியவில்லை என்றும் எப்படி இருந்தாலும் நாக் அஸ்வின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்தால் நல்லா இருக்கும் என்றும் 82 வயது அமிதாப் பச்சனையே அப்படி நடிக்க வைத்த நாக் அஸ்வின் சூப்பர் ஸ்டார் கிடைத்தால் சும்மாவா விடுவார் என்கின்றனர்.
கண்டிப்பா 1000 கோடி உறுதி: நாக் அஸ்வின் இயக்கத்தில் ரஜினிகாந்த் சோலோ படம் நடித்தால் கூட கண்டிப்பாக 1000 கோடி வசூல் வருவது உறுதி என்றும் தலைவர் ரசிகர்கள் மற்ற இயக்குநர்களை நம்பி ரஜினிகாந்த் கஷ்டப்படுவதை விட்டுவிட்டு இவர் இயக்கத்தில் ஒரு படம் நடித்தாலும் உருப்படியாக இருக்கும் என்றும் கூறுகின்றனர். ரஜினிகாந்தின் அடுத்த படத்தை பிடிக்க திரைத்துறையில் பெரும் போட்டி நிலவி வருகிறது என்பதுமட்டும் இதன்மூலம் உறுதியாக தெரிகிறது. ஜெயிலர் 2 படம் நிறைவடைந்த பின்னர் தான் அவருடைய அடுத்த படம் உறுதியாகும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











