Don't Miss!
- News
பாகிஸ்தானில் சம்பளம் ‛கட்’.. கழுத்தை இறுக்கும் பொருளாதார நெருக்கடியால்.. அரசு ஊழியர்களுக்கு ஷாக்!
- Sports
அஸ்வினால் ஆஸி.க்கு காத்திருக்கும் ஆபத்து.. சமாளிக்க தீவிர பயிற்சி.. ஆஸி. வீரர் ரென்ஷா நம்பிக்கை
- Finance
கடன் நெருக்கடி, உணவு பற்றாக்குறை, மின்சார தடை.. பாகிஸ்தானை வாட்டி வதைக்கும் பிரச்சனைகள்..!
- Technology
நல்ல மாசம் பொறக்குது.. பிப்ரவரி மாதத்தில் மட்டும் 17 புதிய போன்கள் அறிமுகம்.. இதோ ஃபுல் லிஸ்ட்!
- Lifestyle
புதன் உருவாக்கும் பத்ர ராஜயோகத்தால் பிப்ரவரி 7 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப் போகுது...
- Travel
கடவுள்கள் பேசுமா? ஆம்! இந்தியாவில் உள்ள இந்த கோவிலில் கடவுள்கள் பேசுகின்றனவாம்! ஆச்சரியமாக இருக்கிறதா?
- Automobiles
தாலிபான்கள் உருவாக்கிய முதல் சூப்பர் கார்... உலக நாடுகளையே மூக்குமேல விரல வைக்க வச்சுட்டாங்க!
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
வாயை கொடுத்து மாட்டிக் கொண்ட பாலய்யா... வார்னிங் கொடுத்த நாக சைதன்யா... இதெல்லாம் தேவையா?
ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நந்தமுரி பாலகிருஷ்ணாவின் வீர சிம்ஹா ரெட்டி 14ம் தேதி வெளியாகியிருந்தது.
பாலகிருஷ்ணா ஜோடியாக ஸ்ருதி ஹாசன், ஹனி ரோஸ் நடித்துள்ள இந்தப் படத்தை கோபிசந்த் மலினேனி இயக்கியுள்ளார்.
ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள வீர சிம்ஹா ரெட்டி பாக்ஸ் ஆபிஸில் 100 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.
இந்நிலையில், இந்தப் படத்தின் சக்சஸ் மீட்டில் பழம்பெரும் நடிகர்கள் குறித்து பாலகிருஷ்ணா பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Veera
Simha
Reddy
Twitter
Review:
பாலகிருஷ்ணாவின்
வீர
சிம்ஹா
ரெட்டி
எப்படி
இருக்கு?

வீர சிம்ஹா ரெட்டி சக்சஸ் மீட்
டோலிவுட் திரையுலகின் மாஸ் நடிகரான பாலகிருஷ்ணா, சூப்பர் மேன் ஹீரோக்களுக்கே சவால் விடும் வகையில் ஆக்ஷனில் பொளந்து கட்டுவார். இவரது ஆக்ஷன் காட்சிகளை கொண்டாட பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில், அதே ஆக்ஷன் ஃபார்முலாவில் பாலய்யா நடித்துள்ள வீர சிம்ஹா ரெட்டி, கடந்த 14ம் தேதி ரிலீஸானது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்க. பாலகிருஷ்ணா ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹனி ரோஸ் நடித்திருந்தனர். கோபிசந்த் மலினேனி இயக்கியுள்ள இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. இதனையடுத்து இந்தப் படத்தின் சக்சஸ் மீட் நடைபெற்றது.

பாலய்யாவின் சர்ச்சை பேச்சு
இந்த சக்சஸ் மீட்டில், தன் தந்தை என்.டி.ராமராவின் காலத்தைச் சேர்ந்த சக நடிகர்கள் குறித்து பேசினார். அப்போது பழம்பெரும் முன்னணி நடிகர்களான அக்கினேனி நாகேஸ்வர ராவ், ரங்கா ராவ் ஆகிய இருவரையும் மரியாதை குறைவாக பாலகிருஷ்ணா பேசியதாக சொல்லப்படுகிறது. பாலய்யா மேடையில் அப்படி பேசியபோது அங்கிருந்தவர்கள் அதனை கேட்டு சிரிக்கும் வீடியோவும் வைரலானது. அதாவது, "என் தந்தை என்.டி.ஆருடன் சில சக நடிகர்கள் இருந்தனர். அந்த ரங்காராவ், அக்கினேனி, தொக்கினேனி..." என கேலி செய்யும் வகையிலும், அவமானப்படுத்தும் விதமாகவும் பேசியுள்ளார்.

நாகார்ஜுனா குடும்பம் கண்டனம்
இதனையடுத்து தங்கள் தாத்தாவான அக்கினேனி நாகேஸ்வர ராவை அவமானப்படுத்திய பாலகிருஷ்ணாவுக்கு, நாகார்ஜூனாவின் மகன்கள், நாகசைதன்யா, அகில் இருவரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் தனித்தனியாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "நந்தமூரி தாரக ராமா ராவ், அக்கினேனி நாகேஸ்வர ராவ், எஸ்.வி.ரங்கா ராவ் இவர்கள் அனைவரும் தங்கள் படைப்பாற்றலால் பங்களித்து தெலுங்கு சினிமாவின் பெருமையாகவும் தூண்களாகவும் திகழ்ந்து வருகின்றனர். அவர்களை அவமானப்படுத்துவது நம்மை நாமே தாழ்த்திக்கொள்வதற்கு சமம்" என தெரிவித்துள்ளனர். அவர்களுடன் ரசிகர்கள் பலரும் பாலய்யாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அசட்டுத்தனமான பாலய்யா
பாலய்யாவின் தந்தை என்.டி.ஆர், அக்கினேனி நாகேஸ்வர ராவ் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டும் இல்லாம இருவரும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர். என்.டி.ஆரின் வாழ்க்கை வரலாற்றில் கூட அக்கினேனி நாகேஸ்வர ராவ் உடனான நட்பு குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படி இருக்கையில் தங்களது குடும்ப நண்பர், மூத்த நடிகர் என்ற பொறுப்பில்லாமல் பாலய்யா இப்படி பேசியது அசட்டுத்தனமானது என ரசிகர்கள் விமர்சனம் செய்துள்ளனர். பல இடங்களிலும் பாலய்யா பொறுப்பில்லாமல் நடந்து கொள்கிறார் என, அவரது பழைய சர்ச்சை வீடியோக்களையும் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து பாலகிருஷ்ணா இதுவரை எந்த விளக்கமும் கொடுத்ததாக தெரியவில்லை. மேலும், அவர் நடிகை ஹனி ரோஸ் உடன் பார்ட்டிக்கு சென்ற போட்டோக்கள் வைரலாகி வருகின்றன.