சமந்தாவுக்குப் போட்டியாக அதிரடி முடிவு எடுத்த நாக சைதன்யா: என்னை அழைத்தால் கண்டிப்பாக போவேன்!

ஐதராபாத்: தெலுங்கு முன்னணி நடிகரான நாக சைதன்யா, கடந்த வருடம் அவரது மனைவி சமந்தாவை பிரிந்தார்.

இந்நிலையில், காஃபி வித் கரண் 7 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சமந்தா நாக சைதன்யாவுடனான விவாகரத்து குறித்து மனம் திறந்திருந்தார்.

இப்போது சமந்தாவுக்குப் போட்டியாக நாக சைதன்யா எடுத்துள்ள அதிரடியான முடிவு, ரசிகர்களை பரபரப்பாக்கியுள்ளது.

பிசி மோடில் நாக சைதன்யா

பிசி மோடில் நாக சைதன்யா

டோலிவுட் டாப் ஸ்டாரான நாகர்ஜுனாவின் மகனான நாக சைதன்யா, தற்போது முன்னணி நடிகராக வலம்வந்து கொண்டிருக்கிறார். அவரது நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் வெளியாகி ஹிட்டாகிக் கொண்டிருக்கும் நிலையில், இப்போது வெங்கட் பிரபுவின் படத்தில் பிசியாக உள்ளார். தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாக்கும் இந்தப் படத்திற்கு, இளையராஜாவும் யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து இசையமைக்கின்றனர். க்ரித்தி ஷெட்டி நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

சமந்தாவின் காஃபி வித் கரண்

சமந்தாவின் காஃபி வித் கரண்

இந்நிலையில், பாலிவுட் இயக்குநர் கரண் ஜோகர் தொகுத்து வழங்கும் 'காஃபி வித் கரண் 7' நிகழ்ச்சியில், நடிகை சமந்தா பாலிவுட் நடிகர் அக்சய் குமாருடன் பங்கேற்றார். அப்போது அவர் அக்சய் குமாருடன் "ஊ சொல்றீயா மாமா" பாடலுக்கு குத்தாட்டம் போட்டு ரசிகர்களை செம்மையாக சூடேற்றினார். மேலும், சமாந்தாவின் திருமணம், விவாகரத்து குறித்து கரண் ஜோகர் எழுப்பிய கேள்விகளுக்கும் அவர் மனம் திறந்து பதிலளித்தார். .

நாக சைதன்யா - சமந்தா விவாகரத்து

நாக சைதன்யா - சமந்தா விவாகரத்து

சமந்தா நடிப்பில் 'தி பேமிலி மேன்' வெப் சீரிஸ் உட்பட மேலும் சில படங்கள் வெளியானது முதல், சமந்தாவிற்கும் நாக சைதன்யாவிற்கும் இடையே மனகசப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. சமந்தாவின் உச்சபட்ச கவர்ச்சி, நாக சைதன்யாவின் குடும்பத்தினருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியதாகவும், அதனால் இருவரும் பிரிந்ததாகவும், ஏராளமான கருத்துகள் வைரலாகின.

ட்ரோல் செய்யப்பட்ட சமந்தா!

ட்ரோல் செய்யப்பட்ட சமந்தா!

சமந்தா - நாக சைதன்யா இருவரும் பிரிவதாக கடந்தாண்டு அக்டோபர் மாதம் ஒன்றாக அறிவித்தனர். 2017ல் திருமணம் செய்துகொண்ட இந்த நட்சத்திரத் தம்பதியின் இல்வாழ்க்கை, நான்கே வருடங்களில் முடிவுக்கு வந்தது. இதனால், சோஷியல் மீடியாக்களில் சமந்தா அதிகம் ட்ரோல் செய்யப்பட்டார். அவை எதற்கும் ரியாக்ட் செய்யாத சமந்தா, தொடர்ந்து நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்.

கஷ்டமா இருந்தாலும் அதுதான் தீர்வு

கஷ்டமா இருந்தாலும் அதுதான் தீர்வு

'காஃபி வித் கரன் 7' நிகழ்ச்சியில் திருமணம் குறித்து கரன் சில கேள்விகளை சமந்தாவிடம் முன்வைத்தார். அதற்கு பதிலளித்த சமந்தா, "மேரேஜ் வாழ்க்கையில் இணக்கமில்லாத சூழலின் போது பிரிவதைத் தவிர வேறு வழியில்லை. அப்போது அது கடினமான முடிவாக இருந்தாலும், இப்போது அதுவே தங்களுக்கு சரியான தீர்வாக அமைந்தது" எனத் தெரிவித்துள்ளார். மேலும், நாக சைதன்யா மீது கோபம் உள்ளதா என கரண் எழுப்பிய கேள்விக்கு, "ஆமாம், இப்போது தனியாக ஒரு அறையில் இருவரும் இருந்தால், அங்கு எந்த கூர்மையான பொருட்களும் இல்லாமல் இருந்தால் நல்லது" என வெளிப்படையாகவேக் கூறினார்.

திருப்பியடித்த நாக சைதன்யா

திருப்பியடித்த நாக சைதன்யா

இந்நிலையில், காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் உங்களுக்கு கலந்துகொள்ள விருப்பமா என நாக சைதன்யாவிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்துள்ள நாக சைதன்யா, "கரண் ஜோகர் விரும்பினால், அவர் அழைத்தால் கண்டிப்பாக கலந்துகொள்வேன்" என அதிரடியாக அறிவித்துள்ளார்.

மனம் திறப்பேன்

மனம் திறப்பேன்

மேலும், "கரண் ஜோகரின் அந்த நிகழ்ச்சி எனக்கு மிகவும் பிடிக்கும் என்றும், அதில் கலந்துகொண்டால் நானும் மனம் திறப்பேன்" எனக் கூறியுள்ளார். இதனிடையே "சிலர் தனிப்பட்ட வாழ்க்கையையும், திரைப்பயணத்தையும் ஒன்றாக பார்ப்பதாகவும், அதில் தனக்கு விருப்பம் இல்லையென்றும்" தெரிவித்துள்ளார். நாக சைதன்யாவின் இந்த அதிரடியான அறிவிப்பு, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X