பொன்னியின் செல்வன் நடிகையுடன் டேட்டிங்கா? இல்லையா?...நாக சைதன்யாவின் ரியாக்ஷன் இதுதான்
ஐதராபாத் : நடிகர் நாகசைதன்யா, தனது காதல் மனைவி சமந்தாவை பிரிவதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிவித்தார். அதற்கு பிறகு தனியாக தான் வசித்து வருகிறார்.
நாக சைதன்யாவும், சமந்தாவும் மீண்டும் சேர வேண்டும் என பலரும் தற்போது வரை கோரிக்கை வைத்து வருகின்றனர். பிரிவை அறிவித்த பிறகு இருவரின் ஒவ்வொரு செயலும் கவனத்தை ஈர்த்து வருகிறது.
நாக சைதன்யாவும், சமந்தாவும் சோஷியல் மீடியாவில் பதிவிடும் போஸ்ட்களை பார்த்து விட்டு,இருவரும் ஒருவரை ஒருவர் தற்போது வரை மிஸ் செய்கிறார்கள் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சமந்தா வாங்கிய வீடு
திருமணமான பிறகு நாக சைதன்யாவுடன் தான் சேர்ந்து வாழ்ந்த வீட்டை மிக அதிக விலை கொடுத்து நடிகை சமந்தா மீண்டும் வாங்கி இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இதனால் நாக சைதன்யாவை மறக்க முடியாமல் சமந்தா தவிக்கிறார். அதனால் அவர் நினைவாக நாக சைதன்யாவுடன் வாழ்ந்த வீட்டை அடம்பிடித்து வாங்கி உள்ளார் என பலரும் கமெண்ட் செய்தனர்.

நடிகையுடன் ரிலேஷன்ஷிப்பா
இதற்கிடையில் கடந்த சில நாட்களாகவே நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபுலாவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருவதாகவும், இருவரும் டேட்டிங் சென்று வருவதாகவும் மீடியாக்களில் தகவல் பரவி வருகிறது. ஆனால் இது பற்றி நாக சைதன்யாவோ, சோபிதாவோ பெரிதாக ரியாக்ட் செய்யாமல் இருந்து வருகின்றனர்.

நாக சைதன்யாவின் ரியாக்ஷன் இதுதானா
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் நாக சைதன்யாவிடமே இந்த கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு நாக சைதன்யா, எனக்கு சிரிக்க தான் தோன்றுகிறது என பதிலளித்தார். இவரின் இந்த ரியாக்ஷனை பார்க்கும் போது இந்த கேள்விக்கு தான் பதலளிக்க விரும்பவில்லை என்பதையே காட்டுகிறது. என்ன பதில் சொன்னாலும் அதை வைத்து சில யூக பேச்சுக்கள் தொடரும் என்று நினைத்துக் கூட நாக சைதன்யா இப்படி ரியாக்ட் செய்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

பொன்னியின் செல்வன் நடிகை
நடிகை சோபிதா நடித்த 'Made in Heaven', நெட்ஃபிளக்ஸ் தயாரித்துள்ள 'Monkey Man', மணிரத்னம் இயக்கி உள்ள பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்கள் ரிலீசிற்கு தயாராக உள்ளன. இன்னும் சில படங்களில் நடித்து வருகிறார். இதில் ஹாலிவுட் படமான 'Monkey Man'படத்தில் தேவ் பட்டேலுடன் நடித்துள்ளார்.

நாக சைதன்யா படங்கள்
நாக சைதன்யா பாலிவுட்டில் நடித்துள்ள லால் சிங் சந்தா படம் ஆகஸ்ட் 11 ம் தேதி ரிலீசாக உள்ளது. இவரின் முதல் ஓடிடி படைப்பான 'Dootha' அதிக பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த படம் அமேசான் பிரைம் வீடியோவில் அடுத்த ஆண்டு ரிலீசாக உள்ளது. சமீபத்தில் நாக சைதன்யா நடித்து வெளியான தேங்க் யூ படம் தோல்வி படமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











