»   »  சமந்தா என்னைவிட 'அவங்ககிட்ட' தான் ரொம்ப நெருக்கம்: வருங்கால கணவர்

சமந்தா என்னைவிட 'அவங்ககிட்ட' தான் ரொம்ப நெருக்கம்: வருங்கால கணவர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தனது வருங்கால மனைவி சமந்தா தன்னை விட தனது தாயிடம் மிகவும் நெருக்கமாக உள்ளதாக நடிகர் நாக சைதன்யா தெரிவித்துள்ளார்.

தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும், நடிகை சமந்தாவுக்கும் பெற்றோர் சம்மதத்துடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதையடுத்து வரும் அக்டோபர் மாதம் 6ம் தேதி ஹைதராபாத்தில் அவர்களின் திருமணம் நடைபெறுகிறது.


திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிக்க திட்டமிட்டுள்ளார் சமந்தா.


சமந்தா

சமந்தா

சமந்தா என்னைவிட என் அம்மாவிடம் மிகவும் நெருக்கமாக உள்ளார். இருவரும் தினமும் ஒரு மணிநேரமாவது போனில் பேசிக் கொள்கிறார்கள் என்று நாக சைதன்யா தெரிவித்துள்ளார்.


சைதன்யா

சைதன்யா

என்னை பற்றி ஏதாவது புகார் கூற வேண்டும் என்றால் சமந்தா என் அம்மாவிடம் தான் கூறுவார். சமந்தா சென்னை செல்லும்போது எல்லாம் என் அம்மாவை பார்த்துவிட்டு வருவார் என்கிறார் நாக சைதன்யா.


நாகர்ஜுனா

நாகர்ஜுனா

சமந்தாவும், வருங்கால மாமியாரும் நெருக்கமாகிவிட்டார்கள். சமந்தா என் அப்பா நாகர்ஜுனாவிடமும் நன்றாக பழகுவார். இருவரும் சேர்ந்தால் பெரும்பாலும் படம் பற்றி பேசுவார்கள் என்று நாக சைதன்யா கூறியுள்ளார்.


தமிழ் படம்

தமிழ் படம்

திருமணத்திற்கு முன்பு ஓய்வு எடுக்க விரும்புவதால் துருவங்கள் 16 பட புகழ் கார்த்திக் நரேனின் நரகாசுரன் படத்தில் இருந்து விலகியுள்ளார் நாக சைதன்யா என்பது குறிப்பிடத்தக்கது.
English summary
Telugu actor Naga Chaitanya said that Samntha is closer to his mother than him. Chaitanya and Samantha are getting married on october 6th.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil