»   »  சமந்தாவுக்கு அக்டோபரில் ஹைதராபாத்தில் திருமணம், அமெரிக்காவில் தேனிலவு

சமந்தாவுக்கு அக்டோபரில் ஹைதராபாத்தில் திருமணம், அமெரிக்காவில் தேனிலவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: நடிகை சமந்தா, நடிகர் நாக சைதன்யாவின் திருமணம் வரும் அக்டோபர் மாதம் ஹைதராபாத்தில் நடக்க உள்ளது.

தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யா, நடிகை சமந்தா காதலித்தனர். பெற்றோர் சம்மதத்துடன் கடந்த ஆண்டு ஹைதராபாத்தில் பிரமாண்டமாக நிச்சயதார்த்தம் நடந்தது.

இதையடுத்து அவர்களின் திருமணம் கோவாவில் நடைபெறும் என்று கூறப்பட்டது.

ஹைதராபாத்

ஹைதராபாத்

எங்களின் திருமணம் கோவாவில் நடப்பதாக கூறுவதில் உண்மை இல்லை. வரும் அக்டோபர் மாதம் ஹைதராபாத்தில் தான் திருமணம் நடைபெறும் என்று நாக சைதன்யா தெரிவித்துள்ளார்.

நாக சைதன்யா

நாக சைதன்யா

எங்களின் திருமணம் என் வீட்டு முறைப்படியும், சமந்தா வீட்டு முறைப்படியும் நடக்கும். ஏ மாயா சேசாவே படத்தில் நடித்தபோது படப்பிடிப்புக்காக நியூயார்க் சென்றோம். அந்த நல்ல நினைவுகளை அசைபோட திருமணத்திற்கு பிறகு நியூயார்க் செல்லும் திட்டம் உள்ளது என்கிறார் நாக சைதன்யா.

காதல்

காதல்

விண்ணை தாண்டி வருவாயாவின் தெலுங்கு பதிப்பான ஏ மாயா சேசாவே படத்தில் நடித்தபோது தான் நாக சைதன்யா, சமந்தா இடையே காதல் ஏற்பட்டதாம்.

நடிப்பு

நடிப்பு

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார் சமந்தா. ஆனால் திருமதியான பிறகு கவர்ச்சியாக நடிப்பது இல்லை என்று முடிவு செய்துள்ளாராம்.

English summary
Naga Chaitanya and Samantha are getting married in October in Hyderabad and not Goa as reported.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil