»   »  தேசிய விருது பெற்ற சினிமா கலைஞர்களுக்கு நடிகர் சங்கம் வாழ்த்து!

தேசிய விருது பெற்ற சினிமா கலைஞர்களுக்கு நடிகர் சங்கம் வாழ்த்து!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தேசிய விருது பெற்ற திரைக் கலைஞர்களுக்கு நடிகர் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நடிகர் சங்கம் அறிக்கை:

Nagar Sangam wishes National Award winners

"சிறந்த மாநில மொழி படத்துக்கான விருது ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்ட, ராஜூ முருகன் இயக்கிய 'ஜோக்கர்' படம் தேர்வு் பெறறுள்ளது. இதே படத்தில் ஜாஸ்மினு ... என்ற பாடலை பாடிய சுந்தர ஐயர் சிறந்த பின்னணி பாடகராகவும், மேலும் 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பில் நடிகர் சூர்யா தயாரித்து நடித்த- விக்ரம் குமார் இயக்கிய '24' படத்தின் ஒளிப்பதிவாளர் திரு என்ற திருநாவுக்கரசு சிறந்த ஓளிப்பதிவாளருக்கான தேசிய விருதையும், இதே படத்துக்கு சிறந்த தயாரிப்பு வடிவமைப்புக்கான தேசிய விருதை சுபத்ரா சக்ரவர்த்தி, ஸ்ரேயாஸ் கெடேகர், அமித் ராய் ஆகியோரும் பெற்றுள்ளார்கள்.

ஸ்டுடியோ 9 ஆர் கே சுரேஷ் தயாரித்த - சீனு ராமசாமி இயக்கிய 'தர்மதுரை' படத்தில் எந்த பக்கம் ... பாடலை இயற்றிய வைரமுத்து சிறந்த பாடல் ஆசிரியருக்கான தேசிய விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்."

English summary
Nadigar Sangam has conveyed its greetings to National Award winning film artists.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil