»   »  படம் பிளாப், திருமணமும் நின்றுவிட்டது: மகனை நினைத்து கவலையில் நடிகர்

படம் பிளாப், திருமணமும் நின்றுவிட்டது: மகனை நினைத்து கவலையில் நடிகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தங்கள் மகன் அகிலின் திருமணம் நின்றுவிட்டதை நினைத்து நடிகர் நாகர்ஜுனா, நடிகை அமலா தம்பதி கவலையில் உள்ளார்களாம்.

தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா, நடிகை அமலா தம்பதியின் மகன் அகிலுக்கும், பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஸ்ரேயா பூபலுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

இந்நிலையில் திருமணம் திடீர் என்று நின்றுவிட்டது.

காதல் முறிவு

காதல் முறிவு

அகிலும், ஸ்ரேயாவும் சில ஆண்டுகள் காதலித்தனர். இந்நிலையில் அவர்களின் காதல் முறிந்துவிட்டதாம். திருமண ஏற்பாட்டின்போது இருவீட்டார் இடையே ஏற்பட்ட பிரச்சனையும் திருமணம் நிற்க காரணமாம்.

அகில்

அகில்

குழந்தை நட்சத்திரமாக தனது தந்தையின் படத்தில் அறிமுகமான அகில் தனது பெயர் கொண்ட படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அந்த படம் ஓடவில்லை.

கவலை

கவலை

அகிலின் சினிமா வாழ்க்கை ஒரு புறம் மோசமாக இருக்கும் நிலையில் அவரின் திருமணமும் நின்றுள்ளது நாகர்ஜுனா, அமலாவை கவலையில் ஆழ்த்தியுள்ளதாம்.

சண்டை

சண்டை

அகில் மற்றும் ஸ்ரேயா ஹைதராபாத் விமான நிலையத்தில் வைத்து சண்டை போட்டார்களாம். அங்கு தான் முதலில் பிரச்சனை ஏற்பட்டதாக தெலுங்கு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

English summary
According to reports, Nagarjuna-Amala couple worry about their son Akhil whose wedding is called off.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil