»   »  அந்தப் பக்கம் "மூத்தார்" மகன்.. இந்தப் பக்கம் அமலா மகன்.. காதலில் விழுந்த நாகார்ஜுனாவின் இரு மகன்கள்

அந்தப் பக்கம் "மூத்தார்" மகன்.. இந்தப் பக்கம் அமலா மகன்.. காதலில் விழுந்த நாகார்ஜுனாவின் இரு மகன்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரே நேரத்தில் நடிகர் நாகார்ஜூனாவின் இருமகன்கள் காதலில் சிக்கியுள்ளனர். ஒருவர் தனது காதலியுடன் லிவ் இன் வாழ்க்கையில் புகுந்துள்ளதாக தகவல்கள் வந்து கொண்டுள்ளன. இன்னொருவர் தனது காதலியை பெற்றோரிடம் அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளார்.

தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவுக்கு மொத்தம் இரண்டு மனைவியர். முதல் மனைவி பெயர் டக்குபதி லட்சுமி ராமநாயுடு. அவருக்கு நாக சைதன்யா என்ற மகன் உள்ளார்.

2வது மனைவிதான் நடிகை அமலா. அவருக்குப் பிறந்தவர்தான் அக்கினேனி அகில்.

சமந்தாவுடன் காதல்...

சமந்தாவுடன் காதல்...

இதில் நாக சைதன்யா நடிகை சமந்தாவைக் காதலித்து வருகிறார். இருவரும் ஒரே வீட்டில் வாழவும் ஆரம்பித்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதை இருவரும் இதுவரை மறுக்கவில்லை. அமைதியாக உள்ளனர்.

அகிலின் காதல்...

அகிலின் காதல்...

இன்னொரு மகன் அகில், குழந்தை நட்சத்திரமாக நடிக்க வந்து இப்போது ஹீரோவாக நடித்து வருகிறார். இவரும் ஒரு பெண்ணைக் காதலித்து வருகிறாராம். ஆனால் அவர் நடிகை இல்லையாம். ஆனால் அவர் யார் என்பதை இப்போது பப்ளிக்காக சொல்ல மாட்டேன் என்று கூறியுள்ளார் அகில்.

காதல் உண்மைதான்...

காதல் உண்மைதான்...

இதுகுறித்து அகில் கூறுகையில், "நான் காதலிப்பது உண்மைதான். மறுக்கவில்லை. ஆனால் திருமணம் நடந்து விட்டதாக சொல்வது தவறு. அதெல்லாம் நடக்கவில்லை. எனது பெற்றோரிடம் காதலியை அறிமுகப்படுத்தவுள்ளேன். அதன் பிறகுதான் எல்லாம்.

நெருங்கிய தோழி...

நெருங்கிய தோழி...

அவர் எங்களது குடும்ப நண்பரின் மகள். எனக்கு நெருங்கிய தோழி. அவருக்கு விளம்பர வெளிச்சம் பிடிக்காது. குறிப்பாக மீடியாக்கள் துரத்துவதை விரும்பவே மாட்டார். எனவே கல்யாணம் தொடர்பான முடிவு பிக்ஸ் ஆனதும் நானே வெளிப்படையாக சொல்வேன். அதுவரை அதிகமாக கேட்காதீர்கள்" என்று கூறியுள்ளார் அகில்.

English summary
The happiest father in Tollywood at the moment is Nagarjuna. His sons, Naga Chaitanya and Akhil Akkineni, have found partners with a possible double wedding soon.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil