»   »  சூர்யா படத்தோடு மோத தெலுங்கு ஹீரோக்கள் பயப்படுவார்கள் - நாகார்ஜுனா

சூர்யா படத்தோடு மோத தெலுங்கு ஹீரோக்கள் பயப்படுவார்கள் - நாகார்ஜுனா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சூர்யா படத்தோடு மோத தெலுங்கு ஹீரோக்கள் பயப்படுவார்கள். தங்கள் பட வெளியீட்டைத் தள்ளி வைப்பார்கள் என்றார் நடிகர் நாகார்ஜுனா.

சென்னையில் நடந்த தோழா பட இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட நாகார்ஜுனா பேசுகையில், "நான் சென்னையில் பிறந்தவன். எனவே நானும் சென்னைக்காரன்தான்.

Nagarjuna's open speech in Thozha audio launch

இந்தப் படத்தில் நடித்தது சிறப்பான அனுபவம். கார்த்தியும் நானும் மனதளவில் இந்தப் படத்துக்குப் பிறகு மிகவும் நெருங்கி விட்டோம் .

படத்தில் நான் முழுக்க சக்கர நாற்காலியிலேயே உட்கார்ந்து இருக்கும் கேரக்டர். என்னை உட்கார வைத்து விட்டு கார்த்தியும் தமன்னாவும் நிறைய டான்ஸ் ஆடி இருக்கிறார்கள் . அப்போது எனக்கும் எழுந்து ஆட வேண்டும் போல இருக்கும்.

இன்னொரு விஷயம் உங்களுக்கு தெரியுமா ?

சூர்யாவுக்கு ஆந்திராவில் ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு. குறிப்பாக தெலுங்கானாவில் இருக்கும் ரசிகர் படை அவரது தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு கொஞ்சமும் சளைத்தது அல்ல. சூர்யாவின் படம் தெலுங்கில் டப்பிங் ஆகி வருகிறது என்றால் தெலுங்கு ஹீரோக்கள் பயந்து போய் தங்கள் படத்தின் ரிலீசை தள்ளி வைப்பார்கள். அவ்வளவு பெரிய மாஸ் அவர் . அவரது அடுத்த படம் 24- என்னுடைய வாழ்த்துகள்," என்றார்.

அது மட்டுமல்ல கார்த்தியின் வேண்டுகோளுக்கு இணங்கி, இதயத்தை திருடாதே படத்தில் அவர் பேசிய 'ஓடிப் போலாமா?' வசனத்தைப் பேசி அரங்கை அதிர வைத்தார் .

English summary
Actor Nagarjuna says that leading Telugu heroes afraid to clash with Surya movies in Andhra.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil