»   »  அண்ணன் இருக்க தம்பிக்கு நிச்சயதார்த்தம் நடத்திய நடிகர் நாகர்ஜுனா

அண்ணன் இருக்க தம்பிக்கு நிச்சயதார்த்தம் நடத்திய நடிகர் நாகர்ஜுனா

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: நடிகர் நாகர்ஜுனாவின் இளைய மகன் அகிலுக்கும் அவரது காதலி ஸ்ரியாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

நடிகர் நாகர்ஜுனா, அமலா தம்பதியின் மகன் அகில் ஆடை வடிவமைப்பாளரான ஸ்ரியா பூபலை காதலித்து வந்தார். இந்நிலையில் அகிலுக்கும், ஸ்ரியாவுக்கும் வெள்ளிக்கிழமை ஹைதராபாத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

Nagarjuna's son Akhil gets engaged

நிச்சயதார்த்தமே பிரமாண்டமாக நடத்தப்பட்டது. நிச்சயதார்த்தத்திற்கு குடும்பத்தார் மற்றும் நெருங்கிய நண்பர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். அகில், ஸ்ரியாவின் திருமணம் இத்தாலியில் நடக்க உள்ளது.

Nagarjuna's son Akhil gets engaged

அந்த திருமணத்திற்கு இங்கிருந்து 600 பேர் செல்கிறார்களாம். அகிலின் அண்ணனும் நடிகருமான நாக சைதன்யா இருக்க அவருக்கு முதலில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

நாக சைதன்யா நடிகை சமந்தாவை காதலித்து வருகிறார். அகிலின் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் சமந்தாவும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Celebrity couple Nagarjuna-Amala's son Akhil has got engaged to his girlfriend Shriya Bhupal in Hyderabad.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil