»   »  மகன்கள் காதலிப்பது மகிழ்ச்சிதான்... மனந்திறந்த நாகர்ஜுனா!

மகன்கள் காதலிப்பது மகிழ்ச்சிதான்... மனந்திறந்த நாகர்ஜுனா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தனது மகன்களின் காதல் தனக்கு மகிழ்ச்சியை அளிப்பதாக நடிகர் நாகார்ஜுனா தெரிவித்திருக்கிறார்.

தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நாகார்ஜுனா. இவருக்கு நாக சைதன்யா, அகில் அக்கினேனி என்று 2 மகன்கள் இருக்கின்றனர். தந்தை வழியில் நாக சைதன்யா, அகில் அக்கினேனி இருவரும் நடிகர்களாக வலம் வருகின்றனர்.

சமீபத்தில் நாக சைதன்யா காதலில் விழுந்ததாக கிசுகிசுக்கப்பட்டது. அவரின் காதலி என்று கூறப்பட்ட சமந்தாவும் இதனை மறைமுகமாக உறுதி செய்தார்.

Nagarjuna Talks about Naga Chaitanya and Akhil' love

இந்நிலையில் இளைய மகன் அகிலும் காதலில் விழுந்துள்ளது உறுதியாகியுள்ளது. தனது 2 மகன்கள் காதல் குறித்து இதுவரை மவுனம் காத்துவந்த நாகார்ஜுனா முதன்முறையாக தனது மகன்களின் காதல் குறித்து மனம் திறந்திருக்கிறார்.

''நாக சைதன்யா காதல் குறித்து எனக்கும், அமலாவிற்கும் மகிழ்ச்சிதான். கூடிய விரைவில் நாக சைதன்யா திருமணம் குறித்த அறிவிப்புகளை வெளியிடுவோம்.

அகில் ஒரு பெண்ணைக் காதலித்து வருகிறார் என்பது உண்மைதான். ஆனால் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக வருகின்ற செய்திகளில் உண்மையில்லை'' என்று தெரிவித்திருக்கிறார்.

நாக சைதன்யா நடித்து வரும் 'பிரேமம்' படத்திற்குப்பின் அவரின் திருமண அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Nagarjuna Talks about Naga Chaitanya and Akhil' love in Recent Function.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil