»   »  "சர்வர் சுந்தரம்" ஆனார் சந்தானம்!

"சர்வர் சுந்தரம்" ஆனார் சந்தானம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணி புரிந்த ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் புதிய படத்திற்கு சர்வர் சுந்தரம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

நடிகர் சந்தானம், தனக்கு புகழ் தேடித் தந்த ‘லொள்ளுசபா' புகழ் ராம்பாலா இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இது தவிர ஆனந்த் பால்கி இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலும் நடிக்க இருக்கிறார்.

இந்தப் படத்திற்கு மறைந்த காமெடி நடிகர் நாகேஷ் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய சர்வர் சுந்தரம் படத்தின் பெயர் வைக்கப் பட்டுள்ளது.கெனன்யா பிலிம்ஸ் ஜே.செல்வகுமார் இப்படத்தை தயாரிக்கிறார்.

உதவி இயக்குநர்...

உதவி இயக்குநர்...

ஆயுத எழுத்து படத்தின் போது மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் தான் ஆனந்த் பால்கி. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

சர்வர் சுந்தரம்...

சர்வர் சுந்தரம்...

இப்படம் கே. பாலசந்தர் இயக்கி நாகேஷ் நடிப்பில் சூப்பர் ஹிட்டடித்த ‘சர்வம் சுந்தரம்' படத்தின் ரீமேக்கா அல்லது படத்தலைப்பு மட்டும் பயன்படுத்தப் படுகிறதா என்பது போகப் போகத்தான் தெரியவரும்.

பெருமை...

பெருமை...

இது தொடர்பாக இப்படத்தின் தயாரிப்பாளர் செல்வா கூறுகையில், "நாகேஷ் சாரின் படத்தலைப்பை எங்கள் படத்திற்கு வைப்பதற்கு நாங்கள் பெருமைப் படுகிறோம். இந்தப் படத்தில் சந்தானம் சமையல் கலைஞராக நடிக்கிறார்.

பொருத்தமானத் தலைப்பு...

பொருத்தமானத் தலைப்பு...

சர்வர் சுந்தரம் படத்திலும் நாகேஷ் இதே போன்ற கதாபாத்திரத்திலேயே நடித்திருந்தார். எனவே, எங்களது புதிய படத்திற்கு இந்தத் தலைப்பு பொருத்தமானதாக இருக்கும் என கருதுகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

பொங்கல் முதல் ஷூட்டிங்..

பொங்கல் முதல் ஷூட்டிங்..

இப்படத்தின் ஷூட்டிங் பொங்கலன்று தொடங்குகிறதாம். நாகேஷுக்குப் பெருமையும் பெயரும் தேடித் தந்த படம் சர்வர் சுந்தரம். இதை சந்தானம் சரியான முறையில் பயன்படுத்தி அவரும் பெயர் வாங்குவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

English summary
The shoot of Santhanam's next film with debutant director Anand Balki is set to kick-start on Pongal. And in keeping with what looks like the next trend on the Kollywood block, the makers of this film, too, have gone in for a well-known and reminisced about vintage film's title for their film — the affable Nagesh's popular film, Server Sundaram.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil