»   »  'நாகேஷ் திரையரங்கம்' பட சர்ச்சை : ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

'நாகேஷ் திரையரங்கம்' பட சர்ச்சை : ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : ஐசக் இயக்கத்தில் நடிகர் ஆரி, ஆஷ்னா ஜவேரி ஆகியோர் நடித்துள்ள படம் 'நாகேஷ் திரையரங்கம்'. இது ஒரு திரையரங்கத்தைச் சுற்றி நடக்கிற கதை எனக் கூறப்பட்டிருக்கிறது.

டிரான்ஸ்இண்டியா மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் ரஜேந்திர எம்.ராஜன், புனிதா ரஜேந்திரன் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

இந்தப் படத்துக்கு எதிராக நடிகர் நாகேஷின் மகனும், நடிகருமான ஆனந்த் பாபு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

நாகேஷ் மகன் மனு

நாகேஷ் மகன் மனு

என்னுடைய தந்தை ஒரு பெரிய நடிகர். அவர் தி.நகரில் நாகேஷ் தியேட்டரை நடத்தி வந்தார். அதே பெயரில் படம் எடுத்து வெளியிட இருக்கிறார்கள். 'நாகேஷ் திரையரங்கம்' என்று பெயர் வைப்பதற்காக எங்கள் குடும்பத்தினரிடம் எந்த அனுமதியும் பெறவில்லை.

நஷ்ட ஈடு வேண்டும்

நஷ்ட ஈடு வேண்டும்

எனவே அந்தப் படத்தை தடைசெய்ய வேண்டும். எனது தந்தையின் பெயரை அனுமதியில்லாமல் பயன்படுத்தியதற்காக 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டும் என்று தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

தியேட்டர் - திரையரங்கம்

தியேட்டர் - திரையரங்கம்

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, 'மனுதாரரின் தந்தை நாகேஷ் தியேட்டர் நடத்தி உள்ளார். ஆனால் எதிர்மனுதாரர் நாகேஷ் திரையரங்கம் என்ற பெயரில் படம் எடுத்துள்ளார். நாகேஷ் தியேட்டர் என்ற பெயரில் எடுக்கவில்லை.

வழக்கு தள்ளுபடி

வழக்கு தள்ளுபடி

இது எந்த வகையிலும் மனுதாரரை பாதிக்காது என்பதால் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது' என்று தீர்ப்பளித்தார் நீதிபதி. 'நாகேஷ் திரையரங்கம்' படத்தை வெளியிடத் தடையில்லை என்பதால் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read more about: nagesh, aari, ஆரி, நாகேஷ்
English summary
Actor Aari and Ashna zaveri have acted in the film 'Nagesh Thiraiyarangam'. Filming without the permission of the nagesh family, producer has been sued by Actor Nagesh's son Anand Babu. That case was dismissed now.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil