twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சென்னையிலிருந்து தெலுங்கு சினிமாவை ஆந்திரத்துக்கு அழைத்துச் சென்ற ஏஎன்ஆர்!

    By Shankar
    |

    ஏஎன்ஆர் என தென்னிந்திய திரைத்துறையினரால் அன்புடன் அழைக்கப்பட்ட அக்கினேனி நாகேஸ்வரராவ் இன்று தனது 90 வது வயதில் மறைந்தார்.

    நாடக நடிகராக தன் வாழ்க்கையை தொடங்கியவர் நாகேஸ்வரராவ். 1941ம் ஆண்டு தர்மபத்தினி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதில் அவர் ஹீரோவின் நண்பனாக அறிமுகமானார்.

    ரயில் நிலையத்தில்...

    ரயில் நிலையத்தில்...

    ஆனால் அவரை விஜயவாடா ரயில் நிலையத்தில் வைத்துப் பார்த்த அன்றைய முன்னணி தயாரிப்பாளர் கண்டசாலா பலராமையா, தனது சீதா ராம ஜனனம் படத்தின் ஹீரோவாக்கினார்.

    சென்னையிலிருந்து தெலுங்கு சினிமாவை பிரித்தவர்

    சென்னையிலிருந்து தெலுங்கு சினிமாவை பிரித்தவர்

    1956 வரை சென்னையில்தான் தெலுங்கு சினிமாக்கள் அனைத்தும் தயாராகின. காரணம், ஆந்திராவின் பெரும்பான்மை பகுதிகள் அப்போது சென்னை மாகாணத்துடன் இணைந்திருந்தன. மொழிவாரி மாகாணங்கள் அமைந்தபோது, ஆந்திரா தனி மாநிலமானது. அதுவரை சென்னையிலிருந்த தெலுங்கு சினிமாவை ஹைதராபாத்துக்கு பிரித்து அழைத்துச் சென்ற பெருமை ஏஎன்ஆரையே சேரும்.

    22 ஏக்கர் நிலம்

    22 ஏக்கர் நிலம்

    சென்னையிலிருந்த தெலுங்கு சினிமாக்ககாரர்களையெல்லாம் ஹைதராபாதுக்கு வருமாறு அழைப்பு விடுத்த அவர், அங்கு தனக்குச் சொந்தமான 22 ஏக்கர் நிலத்தில் பெரிய ஸ்டுடியோ கட்டினார். அதுதான் அன்னப்பூர்ணா ஸ்டுடியோ!

    தேவதாஸ்

    தேவதாஸ்

    இதுவரை 256 படங்களில் நடித்துள்ள அவர், தமிழிலும் பல படங்கள் நடித்துள்ளார். அவற்றில் தேவதாஸ் மிகப் புகழ்பெற்ற படம்.

    25 படங்கள்

    25 படங்கள்

    இது தவிர ஓர் இரவு, மாயக்கண்ணி, பூங்கோதை, மாதர்குல மாணிக்கம், எங்கவீட்டு மகராணி, அலாவுதீனும் அற்புத தீவும், வாழ்க்கை ஒப்பந்தம் உள்பட 25 தமிழ் படங்களில் நடித்துள்ளார். 1963-ல் வெளியான பெண் மனம் என்ற படத்தோடு தமிழில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார் நாகேஸ்வரராவ்.

    இரட்டை வேடம் போட்ட முதல் நடிகர்

    இரட்டை வேடம் போட்ட முதல் நடிகர்

    இந்தியாவிலேயே முதன் முறையாக இட்டாரு மித்ரு என்ற படத்தில் இரட்டை வேடத்தில் நடித்தவர் இவர்தான். சிவாஜி நடித்த நவராத்திரி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் 9 வேடங்களில் நடித்தார்.

    கடைசி படம்

    கடைசி படம்

    தெலுங்கில் இவர் நடித்த கடைசி படம் ஸ்ரீராமராஜ்யம். அதில் வால்மீகி முனிவராக நடித்தார் ஏஎன்ஆர். அடுத்து மனம் என்ற படத்தில் மகன் நாகார்ஜுனாவோடு காமெடி வேடத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அந்தப் படம் வெளியாவதற்குள் மரணமடைந்தார்.

    ஆந்திர சிவாஜி

    ஆந்திர சிவாஜி

    ஆந்திரத்து எம்.ஜி.ஆர். என என்.டி.ராமராவையும் ஆந்திர சிவாஜி என நாகேஸ்வர ராவையும் குறிப்பிடுவது வழக்கம்.

    English summary
    Late A Nageswara Rao was one of the first actors of that period who insisted on moving the Telugu film center from Chennai to Hyderabad.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X