»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

மும்பை வெடிகுண்டு வழக்கில் முதல் குற்றவாளியாக தேடப்பட்டு வரும் தாதா தாவூத் இப்ராகிமின் தம்பி அனீஸ்இப்ராகிமுடன் தொடர்பு வைத்துள்ளதாக கூறப்படும் நடிகை நக்மாவின் தங்கை ஜோதிகாவின் சென்னை வீட்டைபோலீஸார் கண்காணித்து வருகின்றனர்.

நக்மாவுக்கும், அனீஸுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், பலமுறை அனீஸுடன் நக்மாவெளிநிாடுகளுக்கு சென்றுள்ளதாகவும், நக்மாவின் வீட்டிற்கு சென்று ஒரு முறை ரூ. 10 லட்சம் பணம்கொடுத்ததாகவும், தாவூத்தின் கூட்டாளியான ராஜேஷ் பஞ்சாரிய பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இந்தப் புகாரை நக்மா மறுத்திருந்தார். அந்த நக்மா நான் இல்லை. நக்மா என்ற பெயரில் சிறிய பாலிவுட் நடிகைஇருக்கிறார். அவரைத் தான் என்னுடன் இணைத்து குழப்பி குற்றம் சாட்டுகிறார்கள் என்கிறது நக்மா தரப்பு.

ஆனால் நக்மாவின் வீட்டை மிகச் சரியாகக் குறிப்பிட்டு இந்த தேதியில் இவ்வளவு பணம் கொடுத்தேன் என்றுராஜேஷ் கூறியிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் புகார் தொடர்பாக போலீஸார் விசாரணையைமுடுக்கி விட்டுள்ளனர்.

நக்மா இப்போது காங்கிரஸ் கட்சியில் இருக்கிறார். ஆனால், இது மிகப் பரபரப்பான விவகாரம் என்பதால்,மத்தியிலும் மகாராஷ்டிரத்திலும் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் நக்மாவை கைவிட்டுவிட்டதாகத் தெரிகிறது.

இந் நிலையில் நக்மாவின் அனைத்து நடவடிக்கைகளையும் போலீஸார் கண்காணிக்கத் தொடங்கியுள்ளனர்.

அதில் ஒரு கட்டமாக சென்னையில் உள்ள நக்மாவின் வீட்டையும் போலீஸார் தங்களது கண்காணிப்பின் கீழ்கொண்டு வந்துள்ளனர்.

நக்மாவுக்கு சொந்தமாக சென்னை கொட்டிவாக்கத்தில் ஒரு வீடு இருந்தது (நடிகர் சரத்குமார் இதை வாங்கிப்பரிசளித்ததாக முன்பு கூறப்பட்டது). அந்த வீட்டை அவர் விற்று விட்டார்.

அதேபோல, ஆழ்வார்ப்பேட்டையிலும் ஒரு வீடு இருந்தது. அதில்தான் முன்பு நக்மாவின் தங்கையான நடிகைஜோதிகா தங்கி வந்தார். ஆனால், அக்காள்-தங்கை பிரச்சனை வந்ததால் அந்த வீட்டையும் பின்னர் நக்மா விற்றுவிட்டார்.

பின்னர் இருவரும் சமரசமாகிவிட்டனர்.

இப்போது நக்மா சென்னை வந்தால், அபிராமபுரத்தில் உள்ள ஜோதிகாவின் வீட்டில்தான் தங்குகிறார்.ஜோதிகாவின் இந்த வீட்டை தற்போது போலீஸார் ரகசியமாக கண்காணித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதனால் நக்மாவோடு சேர்த்து போலீஸ் கண்காணிப்பு வளையத்தில் ஜோதிகாவும் விழுந்துள்ளார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil