»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

நக்மாவுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் அவ்வளவு சீக்கிரத்தில் தீராது போலிருக்கிறது. அவரைச் சுற்றிய பிடி இறுகிக் கொண்டே வருகிறது.

நக்மாவுக்கும் தாவூத் இப்ராகிமின் தம்பி அனீசுக்கும் தொடர்பு இருப்பதாகவும், அனீஸ் அவ்வப்போது லட்சக்கணக்கில் நக்மாவுக்கு பணம்தந்ததாகவும் போலீசிடம் வாக்குமூலம் தந்திருக்கிறான் தாவூதின் கூலியாளான ஜமீருதீன் காலியா என்ற ஜம்போ.

பான்மசாலா தயாரிப்பாளர்களுக்கும் தாவூதுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் சிக்கியவன்தான் இந்த ஜம்போ.

மிகப் பிரபலமான மாணிக்சந்த் குட்கா தயாரிப்பாளர் ராசிக்லால் மாணிக்சந்த் தாரிவாலுக்கும், போட்டியாய் இந்தத் தொழிலில் இறங்கியகோவா குட்கா தயாரிப்பாளர் ஜே.எம். ஜோஷிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுவிட, இரு தரப்பினருமே தாவூத் கும்பலிடம்சரணடைந்துள்ளனர்.

துபாயில் வைத்து இருவருக்கும் இடையே பிரச்சனையை பேசித் தீர்த்து வைத்த தாவூத், அதற்கு கைமாறாக பல கோடியை இரு தரப்பிலும்வசூல் செய்திருக்கிறான். கூடவே குட்கா தயாரிப்பு பார்முலா மற்றும் இயந்திரங்களை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கச் சொல்லிஇருக்கிறான்.

இதையடுத்து அங்கு தானே ஒரு குட்கா கம்பெனியைத் தொடங்கியிருக்கிறான். இருவருக்கும் சமரசம் செய்து வைத்ததாகக் கூறப்பட்டாலும்கோவா குட்கா அதிபருக்கு சாதகமாகவே தாவூத் செயல்பட்டிருக்கிறான். தாவூதை எதிர்க்க முடியாத மாணிக்சந்த் அதிபர் சமரசத்திட்டத்துக்கு ஒப்புக் கொண்டுள்ளார்.

இந்த விவரம் தெரியவந்தவுடன் இரு குட்கா நிறுவனங்களின் உரிமையாளர்களிடமும் போலீசார் விசாரணையில் இறங்கினர். இயைடுத்துஅவர்கள் தலைமறைவாகிவிட, வழக்கு விசாரணை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த விசாரணையில் மாட்டியவன் தான் தாவூதின் அடியாளான ஜம்போ.

இது தான் குட்கா கேஸ் பின்னணி.

இந்த ஜம்போ தான் நக்மாவுக்கும் தாவூதின் தம்பி அனீசுக்கும் இடையிலான தொடர்புகளை போட்டு உடைத்தவன்.

இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசாருக்கு இன்னொரு விவரமும் கிடைத்தது.

நக்மாவின் சிபாரிசு காரணமாக சச்சின் என்பவருக்கு தெலுங்கு சினிமாவில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. மெனமேலனொயி என்ற படத்தில்சம்பதா என்ற ஹீரோயினுக்கு ஜோடியாக அறிமுகமானார் சச்சின். இந்த சச்சின் யாரென்றால், கோவா குட்கா தயாரிப்பாளர் ஜோஷியின்மகன்.

குட்கா தயாரிப்பு பார்ட்டிகளின் சண்டையை தீர்த்து வைத்த தாவூத் இப்ராகிம் மூலமாகவே நக்மாவுக்கு சச்சின் அறிமுகமானார் என்பதுபோலீசின் வாதம்.

தெலுங்கில் தனக்குத் தெரிந்த சினிமா ஆட்களிடம், சச்சின் எனக்கு மிகவும் வேண்டப்பட்ட ஸ்பெஷல் நபர் என்று சொல்லிஅறிமுகப்படுத்தியிருக்கிறார் நக்மா. அப்படியே ஹீரோ சான்சும் வாங்கித் தந்திருக்கிறார்.

நக்மா-சச்சின் காதலிப்பதாகக் கூட தெலுங்கு சினிமாவில் பேச்சு உண்டு. இருவரும் மும்பை டிஸ்கொத்தேக்களில் ஆட்டம் போட்டதும்உண்டு.

இப்படியாக கோவா குட்கா குடும்பம்- தாவூத் தொடர்புகளை வைத்து நக்மாவைச் சுற்றி விசாரணை வலை இறுகிக் கொண்டிக்கும்நிலையில் மும்பை மட்டுமல்லாது சென்னையில் உள்ளது அவரது தங்கை ஜோதிகா வீடும் ரகசிய போலீஸ் கண்காணிப்புக்குஉள்ளாகியிருக்கிறது.

இதனால் ஜோதிகா பயங்கர டென்சனில் இருக்கிறார்.

Read more about: astrology, chennai, kural, nagma, troubles
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil