»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

தாவூத் இப்ராகிமின் தம்பியுடன் தொடர்பு வைத்திருந்த விவகாரம் தொடர்பாக நடிகை நக்மா மீது சி.பி.ஐ. பிடி இறுகி விட்டது.அவரிடம் உடனடியாக விசாரணை நடத்தப்படும் என்று அதன் இயக்குனர் மிஸ்ரா இன்று அறிவித்துள்ளார்.

மும்பை குண்டு வெடிப்புக்கு காரணமான தாவூத் இப்ராகிமின் தம்பிக்கும் பிரபல நடிகை நக்மாவுக்கும் ரகசிய தொடர்புஇருந்ததாக சமீபத்தில் தகவல் வெளியாகியது. இது திரை உலகினருக்கும், ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால் இதை நடிகை நக்மா மறுத்தார். தீவிரவாதிகளுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது. எனது அரசியல் புகழைக்கெடுக்க எதிரிகள் இவ்வாறு சதி செய்து குற்றம் சாட்டுகின்றனர் என்று அவர் கூறினார்.

இதற்கிடையே மும்பை சிறையில் உள்ள ஜம்போ என்பவன் தான் நடிகை நக்மாவுக்கும் தீவிரவாதிகளுக்கும் உள்ள தொடர்பைஆதாரபூர்வமாக தெரிவித்ததாக நக்மா மீது குற்றம் சாட்டிய அதிகாரிகள் கூறினர்.

இதையும் நக்மா நம்ப மறுத்தார். நக்மா என்று அவர்கள் குறிப்பிடும் நடிகை நான் அல்ல. அது மும்தாஜாக இருக்கலாம் என்றுகூறிய அவர், மும்தாஜின் உண்மையான பெயரில் நக்மாவும் உண்டு என்றார்.

ஆனால் இதையெல்லாம் நம்ப சி.பி.ஐ. தயாராக இல்லை. எனவே நக்மா மீது சி.பி.ஐ.பிடி இறுகி விட்டதாகவே தெரிகிறது. இந்நிலையில், டெல்லியில் இன்று கூறிய சி.பி.ஐ. இயக்குனர் மிஸ்ரா, தீவிரவாதிகளுடனான தொடர்பு குறித்து நடிகை நக்மாவிடம்விசாரணை நடத்தப்படும் என்றார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், பாகிஸ்தானுக்கு குத்கா எந்திரங்களை கடத்திய போது மும்பை போலீஸாரிடம்ஜம்போ பிடிபட்டான். இவன் தாவூத் இப்ராகிம் மற்றும் குத்கா உரிமையாளர்கள் ரஷிக் லால், மாணிக்சந்த், தாரிவால்ஆகியோருக்கு நெருக்கமானவன்.

தாவூத் இப்ராகிமுடன் யார் யாரெல்லாம் ரகசியமாக தொடர்பு வைத்திருந்தனர் என்பதை அவன் மும்பை போலீஸாரிடம்தெரிவித்துள்ளான். அவன் கூறிய பெயர்களில் நடிகை நக்மாவின் பெயரும் உள்ளது.

ஜம்போ கூறியுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்த நாங்கள் தீர்மானித்துள்ளோம். அதே போல நடிகை நக்மாவிடமும்விசாரணை நடத்தப்படும்.

தான் குற்றமற்றவர் என்பதை நக்மா நிரூபிக்க வேண்டும். இதற்கு அவர் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இந்தவழக்கில் அனைத்து முக்கிய அம்சங்களும் விசாரிக்கப்படும். இதில் எவ்வளவு முக்கிய அந்தஸ்து இருப்பவர்களாக இருந்தாலும்தப்பிக்க முடியாது என்றார் மிஸ்ரா.

Read more about: actress nagma, decide, interrogate

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil